For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 8 நாடுகளுக்கு செல்கிறார் மோடி... 3 மாத வெளிநாட்டுப் பயண விபரம்

Google Oneindia Tamil News

டெல்லி : எதிர்கட்சிகளின் விமர்சனத்தையும் கடந்து, பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த 3 மாத வெளிநாட்டு பயண விபரத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு 15 மாதங்களில் சுமார் 25 நாடுகளுக்கும்மேல் வெளிநாடு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

modi

மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து பதிலளித்துள்ள பிரதமர் மோடி, நாம் பெரிய நாடு என்ற தோரணையில் அகங்காரமாக பிற நாடுகளை புறக்கணித்தால், அதன் இழப்பை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது.

உலக அரங்கில் இந்தியா தனித்து வைக்கப்படுவதால் நமக்கு தீமைதான். சமீபத்திய பல்வேறு ஆய்வுகள் எனது அரசின் வெளிநாட்டு கொள்கைக்கு அதிகப்படியான ஆதரவைபெற்றுத் தந்துள்ளன.

முன்னாள் ஆட்சியாளர்களுக்கு, எனது ஆட்சியில் குறை சொல்ல எதுவும் கிடைக்கவில்லை. எனவே எனது வெளிநாட்டு பயணங்களிலும், நான் எத்தனை நாள் சுற்றுப் பயணம் செய்கிறேன் என்பதிலும் கவனம் வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

இதனிடையே பிரதமரின் அடுத்த பயண விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம் அயர்லாந்து, அமெரிக்காவுக்கும், நவம்பர் மாதம் இங்கிலாந்து, துருக்கி, மலேசியா, சவுதி அரேபியாவும் (உறுதியாகவில்லை), டிசம்பர் மாதம் பிரான்சும், ஜனவரியில் இஸ்ரேல் நாட்டுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

English summary
Modi's next three month foreign trip detail has been announced
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X