For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தின உரையின்போது நான் என்ன பேச.. மக்களிடம் கருத்து கேட்கும் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: சுதந்திர தின உரையின்போது எனது உரையில் என்னவெல்லாம் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று மக்களிடமே கருத்து கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இதுகுறி்த்து தனக்கு எழுதுமாறும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வானொலி மூலம் ஆற்றிய மன் கி பாத் உரையின்போது இப்படி ஒரு கோரிக்கையை வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை கட்டுவதன் அவசியத்தை முக்கியமாக வலியுறுத்திப் பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

Modi seeks inputs for Independence Day speech in Mann Ki Baat

இன்றைய மன் கி பாத் உரையின்போது கார்கில் போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியும், நாட்டில் பரவலாக பெய்துள்ள மழை குறித்தும் பேசினார் பிரதமர்.

மேலும் தற்போது நல்ல மழை பெய்துள்ளதால், இந்த ஆண்டு காரிப் பருவ விளைச்சல் நன்றாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுபோக பல்வேறு நாட்டு நடப்புகள், அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் பேசினார்.

mygov.in என்ற அரசின் இணையதளத்தின் வெற்றி குறித்து விவரித்த பிரதமர், மக்கள் இந்த இணையதளத்தின் மூலம் தனக்கு தங்களுடைய கருத்துக்களையும், யோசனைகளையும் நேரடியாகவே தெரிவிக்கலாம் என்றும் கூறினார். மேலும், இந்த வருட சுதந்திர தின உரையின்போது தான் என்னவெல்லாம் பேசலாம் என்பது குறித்த யோசனைகளையும் இந்த இணையதளத்தின் வாயிலாக தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

English summary
PM Narendra Modo in his Mann Ki Baat programme on Sunday, sought inputs from people of the country on what should be the theme of his Independence Day speech. Last year, in Modi’s first August 15 speech as PM, toilet for all schools was the most significant promise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X