சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு பிரதமர் நரேந்திரமோடி இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 69 வது பிறந்த நாளாகும். இதையொட்டி பிரதமர் மோடி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
இன்று பிறந்த நாள் காணும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீண்ட நாள் நல்ல ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலாவும் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், எப்போதும் நம்மை உற்சாகமாக வழி நடத்திச் செல்லும், இரக்கமனப்பான்மை நிறைந்த சோனியாகாந்திக்கு தனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
On her birthday, greetings to Congress President Smt. Sonia Gandhi. May Almighty bless her with long life & good health.
— Narendra Modi (@narendramodi) December 9, 2015 நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் சொத்துக்களை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சோனியா, மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில், மோடி தலைமையிலான மத்திய அரசு ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், மோடி வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பிரதமர் மோடி மக்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்.. கங்காநகர் தெரியுமா? இந்தியாவை மிரட்டும் ஒரு விஷயம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications