ராகுலை பற்றி 621 முறை பிரசாரத்தில் பேசிய மோடி ”குஜராத் மாடலை” பற்றி ஒருமுறை கூட வாயே திறக்கலையே!
குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாத்தில் அம்மாநில வளர்ச்சி மாடல் குறித்து பிரதமர் மோடி மறந்தும் வாய் திறக்கவில்லையாம்.
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பெயரை 621 முறை உச்சரித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் பாஜகவினர் பெருமிதமாகப் பேசுகிற குஜராத் மாடல் பற்றி ஒரே முறை கூட வாயே திறக்கவில்லையே மோடி என பாய்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒன்று சமூக வலைதளங்களில் உக்கிரமாக வைரலாகி வருகிறது. ஒரு பத்திரிகையாளரின் கணக்கீடு என மணீஷ் திவாரி பதிவிட்டுள்ளதாவது:

குஜராத் சட்டசபை தேர்தலுக்கான 29 பிரசார கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி
- ராகுல் பெயரை நேரடியாக, மறைமுகமாக 621 முறை
- காங்கிரஸ் பெயரை 427 முறை
- சர்தார் படேல் பெயரை 209 முறை
- விகாஸ் என்பதை 103 முறை
- இந்து என்பதை 93 முறை
- ராம் என்பதை 27 முறை குறிப்பிட்டிருக்கிறார்.
A JURNO MADE THIS COMPILATION OF Modi’s last 29 rallies:-
— Manish Tewari (@ManishTewari) December 7, 2017
1. Rahul(including reference) - 621 mentions
2. Congress - 427 mentions
3. Sardar Patel - 209 mentions
4. Vikas - 103 mentions
5. Hindu - 93 mentions
6. Ram - 27 mentions
7. Gujarat Model - 0 mentions. THIS IS NERVOUSNESS
ஆனால் குஜராத் மாடல் என்பதை ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.
இவ்வாறு மணீஷ் திவாரியின் பதிவு இருக்கிறது. இப்போது இதுதான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக ஓடுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications