ஏமனில் இருந்து 11 இந்தியர்களை மீட்டதற்கு நவாஸ் ஷரீபுக்கு நன்றி தெரிவித்த மோடி
டெல்லி: ஏமனில் சிக்கித் தவித்த 11 இந்தியர்களை மீட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் சிக்கித் தவித்த 4 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆபரேஷன் ராஹத் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாராட்டியுள்ளன. இந்நிலையில் ஏமனில் இருந்து 11 இந்தியர்களை பாகிஸ்தான் மீட்டு வந்துள்ளது. கராச்சி வந்த அவர்களை தனி விமானம் மூலம் நாங்களே இந்தியா அனுப்பி வைக்கிறோம் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
I welcome our 11 citizens who've returned from Yemen with assistance from Pakistan. Thank you PM Nawaz Sharif for your humanitarian gesture.
— Narendra Modi (@narendramodi) April 8, 2015 பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொண்டது. இதையடுத்து அந்த 11 பேரும் சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை டெல்லி வந்து சேர்ந்தனர்.
Service to humanity knows no borders. Glad we helped many countries in evacuation from Yemen.
— Narendra Modi (@narendramodi) April 8, 2015 இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தான் உதவியுடன் ஏமனில் இருந்து மீட்கப்பட்டு நாடு திரும்பியுள்ள 11 இந்திய குடிமக்களை நான் வரவேற்கிறேன். மனிதநேய செயலுக்காக பிரதமர் நவாஸ் ஷரீபுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதர்களுக்கு சேவை செய்வதற்கு எல்லை இல்லை. ஏமனில் இருந்து மக்களை மீட்க நாம் பல நாடுகளுக்கு உதவியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏமனில் இருந்து மக்களை மீட்க பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம் மற்றும் இலங்கைக்கு இந்தியா உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications