பாஜகவுக்கு வாக்களித்த கர்நாடக சகோதர, சகோதரிகளுக்கு நன்றி - மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவுக்கு வாக்களித்த கர்நாடக வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பெரும்பான்மை பலத்தை நோக்கி விரைந்த அக்கட்சி திடீரென தடாலடியாக பின்னடைவைச் சந்தித்து தனிப் பெரும் கட்சியாக வந்து நிற்கிறது. இதனால் கர்நாடக பாஜகவினர் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

Modi thanks the people of Karnataka

மறுபக்கம் 2வது இடத்தைப் பிடித்த காங்கிரஸும், 3வது இடத்தைப் பிடித்த மதச்சார்பற்ற ஜனதாதளமும் கை கோர்த்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளன. ஆனால் ஆளுநர் அதைப் புறம் தள்ளி விட்டார். பாஜகவை பெரும்பான்மை பலத்தை நி்ரூபிக்க உத்தரவிட்டு 7 நாள் டைம் கொடுத்துள்ளார்.

இந்தப் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்து டிவீட் போட்டுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், பாஜகவின் வளர்ச்சி அரசியலுக்கு உறுதியாக ஆதரவளித்து வாக்களித்த கர்நாடக சகோதரர்கள், சகோதரிகளுக்கு எனது நன்றிகள். பாஜகவை கர்நாடகத்தில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெறச் செய்ததற்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இரவு பகலாக பாடுபட்டு, கட்சியின் வெற்றிக்காக உழைத்த கர்நாடக பாஜக தொண்டர்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன் என்று கூறியுள்ளார் மோடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+