பாஜக தலைமையகத்தில் நரேந்திர மோடி! ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்சி தலைமையகத்துக்கு சென்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை ஏற்க மறுத்த அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தூதராக நிதின் கத்காரி டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்.
அதே நேரத்தில் இன்று காலை குஜராத்தின் காந்திநகர் இல்லத்தில் வழக்கம்போல அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டும் கோப்புகளில் கையெழுத்திட்டுக் கொண்டும் இருந்தார் நரேந்திர மோடி.

இந்நிலையில் இன்று மாலை தாம் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை என்று கூறி 3 மணியளவில் அகமதாபாத்தில் இருந்து பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்குப் புறப்பட்டார். மாலை 5 மணியளவில் டெல்லி வந்தடைந்தார் மோடி. அவர் நாடாளுமன்ற குழு கூட்டத்துக்கு முன்பாக அத்வானியை சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அத்வானியை மோடி சந்திக்கவில்லை.

பாஜக தலைவர் ராஜ்நாத்தை நரேந்திர மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். சிறிது நேர ஆலோசனைக்குப் பின்னர் பாஜக தலைமையகத்துக்கு சென்றார் நரேந்திர மோடி. அங்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனிடையே நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வதாக மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார். இவர் ஏற்கெனவே மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அத்வானி அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!










Click it and Unblock the Notifications