மீண்டும் '1999' கூட்டணி? பாஜக அணியில் திமுக, மதிமுக, பாமக! ப்ளஸ் தேமுதிக?
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான அரை இறுதி களமாக கருதப்பட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.. இதனைத் தமிழகத்தில் கூட்டணி மாற்றங்களுக்கு வலுவான அடித்தளமும் போடப்பட்டு வருகிறது.
டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த இந்த வெற்றி லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் கருதுகின்றன.
ஏற்கெனவே தமிழகத்தில் பாரதிய ஜனதா அணியில் இடம் பிடித்துவிட்டோமே என்று துண்டு போட்டு உட்கார்ந்திருக்கிறது மதிமுக.. இதை உறுதிப்படுத்துவிதமாகவே 4 மாநில தேர்தல் முடிந்த உடனேயே மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மோடி பிரதமராவது உறுதி
அந்த அறிக்கையில், 2014 லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி பிரதமராவது உறுதி என்று சான்றிதழை வழங்கியிருந்தார் வைகோ.

பச்சமுத்து புண்ணியத்தில் பாமக
இதேபோல் இந்திய ஜனநாயக கட்சியின் பச்சமுத்து, பாட்டாளி மக்கள் கட்சியை பாஜக அணியில் இணைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துவிட்டார். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.

திமுகவும் க்ரீன் சிக்னல்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பாஜக அணி பக்கம் திமுக சாய்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக காங்கிரஸிடம் இருந்து விலகிக் கொண்டே இருக்கிறது திமுக. 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான போது, காங்கிரஸுக்கு பின்னடைவுதான் என்று பகிரங்கமாகவே விமர்சித்தார் கருணாநிதி.

சோவுடன் நெருக்கம்..
பத்திரிகையாளரும் அரசியல் தரகருமான சோ, பாஜக, மோடிக்கு நெருக்கம். அதிமுக தலைமைக்கும் நெருக்கம். ஆனால் சோவுடன் இப்போது நெருக்கம் பாராட்டுகிறார் கருணாநிதி..

மீண்டும் 1999
தற்போதைய சூழ்நிலையானது தமிழக அரசியல் மீண்டும் 1999 உருவாகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. அப்போது பாஜகவுடன் திமுக, மதிமுக, பாமக ஆகியவை இணைந்து கணிசமான வெற்றியை பெற்றன.

கூடுதல் பலம்
தற்போது அதே அணி சேர்க்கையில் கூடுதல் பலமாக கணிசமான வாக்கு சதவீதத்தை வைத்திருக்கும் தேமுதிகவும் இணைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அப்படி பாஜக, திமுக, தேமுதிக, மதிமுக, பாமக என்ற அணி உருவானால் தமிழகத்தில் கடும் போட்டி நிலவும் என்பதுதான் நிதர்சனம்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications