ஆக்ஷன் ஹீரோ மோடிக்கு ‘நமோ’ என்ற பெயரை வைத்ததே நான் தான்... சத்ருகன் சின்கா பெருமிதம்
பாட்னா: ‘நமோ‘ என்ற பெயரை நான்தான் உருவாக்கினேன் என்றும் இந்தத் தேர்தலில் நரேந்திர மோடிதான் ஆக்ஷன் ஹீரோ என்றும் தெரிவித்துள்ளார் இந்தி நடிகரும், பாட்னா தொகுதி பாஜக வேட்பாளருமான சத்ருகன் சின்கா.
நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான சத்ருகன் சின்கா, பீகாரின் பாட்னா தொகுதியில் பா.ஜ. சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர்.
அப்போது அவர் கூறியதாவது :-

சோதித்துப் பாருங்கள்...
நான் தொகுதிக்கு அதிகம் வருவதில்லை. என் மனைவிதான் இங்கு வருகிறார்‘ என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். விமான நிலைய கோப்புகளைச் சோதித்துப் பாருங்கள். நான் எத்தனை முறை வந்து போயிருக்கிறேன் என்பது தெரியும்.

என் நட்சத்திர அந்தஸ்து...
என் தொகுதியில் எந்த வேலையும் நடக்காமல் இல்லை. எனது நட்சத்திர அந்தஸ்தை வாக்காளர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

பொது விவாதத்துக்கான நேரம் இதுவல்ல...
‘ஆம் ஆத்மி வேட்பாளர் பர்வீன் அமானுல்லா, பொது விவாதத்துக்கு அழைத்திருக்கிறாரே‘ என்று கேட்கிறார்கள். அவர் என்னை டின்னருக்கு அழைக்கலாம். அவர் மீது மரியாதை வைத்திருக்கிறேன். பொதுவிவாதத்துக்கான நேரம் இப்போது இல்லை. அப்படியே ஒரு விவாதம் நடந்தாலும் அதன் மூலம் அவருக்கு ஏன் நான் பிராசரம் செய்ய வேண்டும்?

நானே நடிகன் தானே...
‘பிரசாரத்துக்கு என் மகளும் நடிகையுமான சோனாக்ஷி சின்கா வருவாரா?' என்று கேட்கிறார்கள். வந்தால் நல்லதுதான். ஆனால், நானே நடிகன் என்பதால் அவர் வரத் தேவையில்லை.

நான் தான் பேர் வைத்தேன்....
நரேந்திர மோடிக்கு ‘நமோ‘ என்ற பெயரை உருவாக்கியவன் நான். அவர்தான் இந்த தேர்தலில் ஆக்ஷன் ஹீரோ.

வெற்றி நிச்சயம்...
நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. அதனால் இத்தேர்தலில் பாஜக சுலபமாக அதிக இடங்களில் வெற்றி பெறும்.

மாற்றத்திற்கான நேரம்...
இளம் வாக்களர்கள் மாற்றத்தையும் வலிமையான தலைமையையும் விரும்புகிறார்கள். அது நிச்சயம் நடக்கும்' என இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார் சத்ருகன் சின்கா.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications