ராகுல் பிரதமரானால் மோடி சிறைக்கு செல்வது கன்பார்ம்... இது பெனிபிரசாத் மிரட்டல்
பல்ராம்பூர்: ராகுல் காந்தி பிரதமரானால் ஆறு மாதங்களில் மோடி சிறைக்கு செல்வார் என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பெனி பிரசாத் வர்மா.
உத்திரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பெனி பிரசாத் வர்மா எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.

தனது பேச்சினூடே ‘நாய்களிடம் இருந்து நமது நாட்டை காக்க வேண்டியது இந்து மற்றும் முஸ்லீம் மக்களின் கடமை' என தெரிவித்தார் பெனி பிரசாத்.
அவர் கூறியதாவது: மோடி ஒரு சர்வாதிகாரி, அவர் ஒரு போதும் நமது நாட்டின் பிரதமாராக வர முடியாது.
பாரதீய ஜனதா அது என்ன விரும்புகிறதோ அதை செய்யும். புகழ்ந்து பேசலாம் அல்லது ஊடகங்களை விலைக்கு வாங்கலாம் . ஆனால் அவரால் ஒரு போதும் பிரதமராக வரமுடியாது.
ராகுல் காந்தி பிரதமாரானால் ஆறு மாதங்களுக்குள் குஜராத் கலவரத்துக்காக மோடி சிறையில் அடைக்கப்படுவார். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த பிறகு அக்கட்சியின் தலைவர்களில் சிலர் அவமானப்படுத்தபடுகின்றனர் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications