"ஒரு பெண்ணாக இருந்தாலும்"... வங்கதேசத்தி்ல் பேசிய பேச்சால் சமூக வலைதளங்களில் வதைபடும் மோடி!
டெல்லி: வங்கதேசம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பேசிய பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது பேச்சுக்கு டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் கண்டனமும், கிண்டலும் தெரிவித்து வருகின்றனர்.
மோடி கூறிய #despitebeingawoman என்ற வார்த்தையும் டிரெண்டிங் ஆகியுள்ளது.
ஜூன் 6ம் தேதி 2 நாள் பயணமாக டாக்கா போய்ச் சேர்ந்தார் மோடி. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். டாக்கா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசுகையில், பிரதமர் ஷேக் ஹசீனாவைப் புகழ்ந்து பேசினார். ஆனால் அவரது பேச்சின்போது இடம் பெற்ற ஒரு வார்த்தை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.

ஒரு பெண்ணாக இருந்தும்
மோடி பேசுகையில், ஒரு பெண்ணாக இருந்தும் கூட, தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார் பிரதமர் ஷேக் ஹசீனா. இதற்காக நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன் என்பதே மோடி கூறிய வார்த்தை.

அது எப்படிச் சொல்லலாம்
இதுதான் சர்ச்சையாகியுள்ளது. அது எப்படி ஒரு பெண்ணாக இருந்தும் என்ற வார்த்தையை மோடி சொல்லலாம் என்று பலரும் பேஸ்புக், டிவிட்டரில் பொங்கி வருகின்றனர்.

தப்பும் தவறுமாய்
வழக்கமாக பெண்கள் குறித்து ஏதாவது தப்பும் தவறுமாய் பேசி பாஜக அமைச்சர்களும், தலைவர்களும்தான் சர்ச்சையில் சிக்குவார்கள். ஆனால் மோடியே தற்போது சிக்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

போடு ஒரு ஹேஷ்டேக்!
தற்போது இதை வைத்து ஹேஷ்டேக் போட்டு கிண்டலடிக்கவும், கண்டனம் செய்யவும் ஆரம்பித்து விட்டனர் பலர்.
|
டிவிங்கிள் கன்னா
நடிகை டிவிங்கிள் கன்னா போட்டுள்ள ஒரு டிவிட்டில் நாம் அனைவரும் ரகசியமாய் ஆண்கள்தான். காலையில் கவனமாக மீசையை ஷேவ் செய்து விடுகிறோம் என்று கிண்டலடித்துள்ளார்.
|
துர்கா நந்தினி
துர்கா நந்தினி என்பவர் போட்டுள்ள டிவிட்டில், ஒரு பெண்ணாக இருந்தோதும் நான் சுவாசிக்கிறேன், உயிரோடு இருக்கிறேன், இந்த நாட்டில் வாழ்கிறேன். இதுவே மாபெரும் சாதனைதான் என்று கூறியுள்ளார்.
|
தீ்ப்தி
தீப்தி திரிவேதி என்பவர் போட்டுள்ள டிவிட்டில், ஒரு பெண்ணாக இருந்தபோதும் கங்கனா ரனாவத் நன்றாக நடிக்கிறார், நல்ல நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறார் என்று மோடியை வாரியுள்ளார்.
|
நதாலி
நதாலி சாம்பி என்பவர் இன்னும் ஒரு படி மேலே போய், நான் ஒரு பெண்ணாக இருந்தும் கூட ஒரு டீ போட்டு குடித்து விட்டு சில மெயில்களையும் பார்த்து விட்டேன் என்று மோடியைக் கடுப்படித்துள்ளார்.
|
இது அதுக்கும் மேல!
இதுதான் அல்டிமேட்.... யாஷஸ்வி என்பவர் போட்டுள்ள டிவிட்டில், ஒபாமா ஒரு பார்க் பென்ச்சில் அமர்ந்திருப்பதையும், அவருக்கு முன்பு ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் நின்று கொண்டிருக்கும் படத்தைப் போட்டு இப்படி எழுதியுள்ளார். ஒபாமா ஒரு செக்ஸிஸ்ட்.. இவ்வளவு பெரிய பெஞ்ச்சில் அவரே முழுமையாக உட்கார்ந்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். பாவம் ஒரு பெண்ணாக இருந்தும் மெர்க்கல் நின்று கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
என்ன பண்றது.. பேசியாச்சு.. வாங்கிக் கட்டித்தான் ஆக வேண்டும்!
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications