பிரதமர் மோடியை சந்தித்த மோகன்லால்.. பாஜகவில் சேர்க்கிறாரா?

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரதமர் மோடியை சந்தித்ததை அடுத்து அவர், பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார். நேற்று பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது. கேரளா வெள்ளம் தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வரை பல விஷயங்கள் குறித்து இதில் விவாதித்துள்ளனர்.

பலமாக இல்லை

பலமாக இல்லை

பாஜகவிற்கு தமிழகம் போலவே கேரளாவிலும் பெரிய பலம் இல்லை. அதேபோல் பாஜகவிற்கு கேரளாவில், தமிழகம் அளவிற்கு கூட பெரிய முகம் இல்லை. இதனால் பாஜகவின் அகண்ட பாரத கனவிற்கு கேரளா பெரிய இடையூறாக உள்ளது.

ஒருவர் இருக்கிறார்

ஒருவர் இருக்கிறார்

தற்போது கேரளாவில் பாஜகவில் ஒரே ஒரு சினிமா பிரபலம்தான் அரசியலில் உள்ளார். சில சிறிய நடிகர்கள் இருந்தாலும் பாஜகவில் ஒருவர் மட்டுமே கொஞ்சம் பிரபலமானவர். சுரேஷ் கோபி (ஐ படத்தில் வில்லனாக நடித்தவர்) பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

சந்தித்தார்

சந்தித்தார்

இந்த நிலையில்தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார். நேற்று பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. ஜென்மாஷ்டமி வாழ்த்து கூறிய மோகன்லால் தனது பவுண்டேஷன் குறித்து இதில் பேசினார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரதமர் மோடியை சந்தித்ததை அடுத்து அவர், பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மோகன்லால் முன்னிறுத்த பாஜக முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+