உ.பி.யில் பள்ளிவளாகத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளி வளாகம் ஒன்றில் இளம் பெண் ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெட்கக்கேடான இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தின்தான் நடைபெற்றுள்ளது.
உத்தரபிரதேசத்தில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும் இதேபோல ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
வியாழக்கிழமையன்று காலை 6 மணியளவில் லக்னோ அருகில் உள்ள மோகன்லால்காஞ்ச் பகுதியில் உள்ள பள்ளியின் அருகே நிர்வாண நிலையில் உடலில் காயங்களுடன் இருந்த இளம்பெண்ணின் உடலைக் கண்ட கிராம மக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அந்தப் பெண்ணின் சடலம் கிடந்த இடத்தின் அருகே ரத்தமானது வழிந்தோடி குளம் போல தேங்கியிருந்தது.
இதைக்கண்ட போலீசாரும் கிராம மக்களும் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனையில் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்தப் பெண் நான்கு அல்லது 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அந்தரங்க உறுப்புகளில் அதிக அளவு காயம் ஏற்பட்டு அதீத ரத்தப் போக்கு ஏற்பட்டதாலேயே மரணம் நேரிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் அகிலேஷ் யாதவ், மாநில காவல்துறை உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மிக அருகாமையில்தான் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் வருகை தந்தார். இதனால் பலாத்கார சம்பவம் வெளியில் வராமல் காவல்துறை பார்த்துக்கொண்டது. ஊடகங்களிலும் அதிகம் வெளியே வரவில்லை.
அகிலேஷ் யாதவின் உத்தரவின் போலீஸ் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநில டிஜிபி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவமாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தின் பதான் மாவட்டத்தில் தலித் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டன.
உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய இந்த சம்பவங்களைப் போல மோகன்லால்கான்ஞ் பகுதியில் நடைபெற்ற பலாத்காரமும் அமைந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications