"லிப்ட் தரேன் தைரியமா வாங்க!" தாய் மற்றும் 6 வயது மகள் கூட்டு பலாத்காரம்.. ஓடும் காரில் கொடூரம்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் ஓடும் காரில் நடந்த பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் பாலியல் குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.
இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்த போதிலும், இதுபோன்ற பாலியல் குற்றங்கள் பெரியளவில் குறையவில்லை.

கொடூரம்
அதிலும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இப்போது அதேபோன்ற ஒரு கொடூர சம்பவம் தான் உத்தரகண்ட் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. பெண் ஒருவர் அவரது 6 வயது குழந்தை உடன் முஸ்லீம் மதத் தளமான பிரின் காலியாரில் இருந்து வீடு திரும்பும் போது தான், இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

உத்தரகண்ட்
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரின் ரூர்க்கியில் உள்ள முஸ்லீம் மதத் தளமான பிரன் காலியாரில் இருந்து தனது வீட்டிற்குத் திரும்பப் பெண் ஒருவர் தனது 6 வயது குழந்தை உடன் காத்திருந்தார். அந்தச் சமயத்தில் சோனு என்ற நபர், லிப்ட் கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி உள்ளார். அவரை நம்பி இந்தப் பெண்ணும் தனது குழந்தை உடன் காரில் ஏறி உள்ளார்.

பலாத்காரம்
காரில் ஏறிய போது தான், அதில் ஏற்கனவே வேறு சிலர் இருப்பதை அப்பெண் உணர்ந்துள்ளார். கார் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் தான் அவர்களது சுயரூபம் தெரிய ஆரம்பித்துள்ளது. முதலில் அவர்கள் அந்த பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசத் தொடங்கி உள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த கும்பல் அப்பெண்ணை கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

6 வயது சிறுமி
ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் ஆறு வயது குழந்தையிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அப்பெண், தன்னை காப்பாற்றும்படி கத்தி உள்ளார். இருப்பினும், கார் வேகமாகச் சென்று கொண்டு இருந்ததால், அவரது சத்தம் வெளியே கேட்கவில்லை. தாய் - மகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்த அந்த கும்பல் இருவரையும் அங்கிருந்த கால்வாய் அருகே இறக்கிவிட்டுச் சென்றனர்.

புகார்
இரவு நேரத்தில் 6 வயது சிறுமியுடன் இருந்த அந்தப் பெண் செய்வது அறியாமல் தவித்துள்ளார். இதையடுத்து நள்ளிரவில் அந்த பெண் காவல் நிலையத்திற்குச் சென்று சம்பவம் குறித்து புகார் அளித்தார். காரில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை அப்பெண்ணால் தெளிவாகக் கூற முடியவில்லை. இருப்பினும், காரை ஓட்டிய சோனு என்பவரை அந்தப் பெண் சரியாக அடையாளம் காட்டிவிட்டார்.

போலீஸ்
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ரூர்க்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய் மற்றும் மகளுக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காரை ஓட்டிய சோனு உள்ளிட்ட குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications