Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருத்துவமனையில் தாயார் ஹீராபென்..நலம் விசாரித்த மோடி..விரைவில் குணம் பெற ராகுல், மமதா பிரார்த்தனை

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: உடல்நலக்குறைவினால் அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடியின் தாயார் விரைவில் குணமடைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரார்த்தனை செய்தார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் வசித்து வருகிறார். ஹீராபென் மோடி கடந்த ஜூன் மாதம் தன்னுடைய 100வது பிறந்தநாளை கொண்டாடினார். 100 வயதானாலும் திடகாத்திரமாக இருக்கும் ஹீராபென் மோடி தேர்தல்களில் தவறாமல் வாக்களித்து வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் கூட ஹீராபென் மோடி வாக்களித்தார்.

ஆரோக்கியமாக இருந்த அவருக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலைசீராக இருப்பதாக மருத்துவமனைதரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் தர்ஷனாபென் வகேலா மற்றும் கவுசிக் ஜெயின் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று உள்ளார்கள்.

Mother Heeraben in hospitalized Modi inquired about health Mamata pray for speedy recovery

தகவல் அறிந்து மேத்தா மருத்துவமனைக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, தாயாரைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அங்கிருந்த டாக்டர்களிடம் தாயாரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் மருத்துவமனையில் இருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய தாயை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். அதேபோல் தன்னுடைய தாயை பற்றி உணர்ச்சிகரமாக மதர் என்ற பெயரில் பிளாகையும் அவர் எழுதி இருக்கிறார். அதேபோல் அடிக்கடி தன்னுடைய தாயாரை பற்றி பொது நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார்.

கடந்த மாதம் குஜராத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வந்த பிரதமர் மோடி, தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றுவிட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல மோடியின் தாயார் விரைவில் குணமடைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரார்த்தனை செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் நலம் பெற்று நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள், அவர் விரைவில் குணமடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர்கிலோன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் குணமடையவும் நல்ல ஆரோக்கியதுடன் இருக்கவும் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+