ஜாலியாக இருக்க முடியலையே.. மாற்று திறனாளி மகனை.. கழுத்தை நெரித்தே கொன்ற.. கொடூர தாய்!

மாற்று திறனாளி குழந்தையை பெற்ற தாய் கொன்றுள்ளார்

Subscribe to Oneindia Tamil

மயிலார்தேவ்பல்லி, தெலுங்கானா: ஜாலியாக இருக்க பெற்ற மகன், அதுவும் மாற்று திறனாளி மகன் தொந்தரவாக இருந்ததால், கழுத்தை நெரித்தே கொன்றுள்ளார் தாய்.. இதற்கு கள்ளக்காதலனும் உடந்தை.. இப்போது இந்த ஜோடி சிறையில் உள்ளது!

தெலங்கானா மாநிலம், மயிலார்தேவ்பல்லி மண்டலம் பகுதியை சேர்ந்தவர் சுல்தான் பேகம்.. வயது 40 ஆகிறது.. 10 வருஷத்துக்கு முன்பு ஹாஜி என்பவருடன் கல்யாணம் ஆனது.. 3 மகன்கள் உள்ளார்கள்

ஆனால், 2 வருஷத்துக்கு முன்பு ஹாஜியை, சுல்தான் டைவர்ஸ் செய்துவிட்டு, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.. அப்போது இஸ்மாயில் என்பவருடன் நட்பு அதிகரித்தது.. கல்யாணத்துக்கு முன்பே இஸ்மாயில் சுல்தானுக்கு ரொம்பவும் பழக்கம்.. இப்போது கணவனை பிரிந்த நிலையில், இஸ்மலாயிலை வீட்டுக்கே வரவழைத்து ஜாலியாக இருந்துள்ளார் சுல்தான்.

சுல்தான்

சுல்தான்

ஒவ்வொரு முறை இஸ்மாயிலை வீட்டுக்கு வரவழைக்கம்போதெல்லாம், தன் அப்பா, அம்மாவை ஏதாவது சாக்கு சொல்லி வெளியே அனுப்பி வைத்துவிடுவாராம்.. இப்படித்தான், போன 22ம் தேதியும் வீட்டிற்கு இஸ்மாயிலை வரவழைத்துள்ளார்.. அப்போது சுல்தானின் 2 மகன்களும் வெளியே சென்றுவிட்டனர்.. 3வது மகன் அஜ்மத் மட்டும் இருந்தான்.. இவன் ஒரு மாற்றுத்திறனாளி ஆவான்.

கழுத்து நெரிப்பு

கழுத்து நெரிப்பு

இவனால் எங்குமே நடமாட முடியாத நிலை.. 7 வயதாகிறது.. எப்போது வந்தாலும் அஜ்மத் வீட்டிலேயே இருப்பதால், உறவுக்கு தொந்தரவாக இருப்பதாக தாயும், இஸ்மாயிலும் நினைத்தனர்.. அதனால் அந்த குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தனர்.. அதன்படியே குழந்தையின் கழுத்தையும் நெரித்து கொன்றனர்.. பிறகு அவசர போலீஸ் 100-க்கு போன் செய்து மகனை யாரோ கொன்றுவிட்டதாக சுல்தான் ஒப்பாரி வைத்தார்.

கொலை

கொலை

இதையடுத்து, மயிலார்தேவ்பல்லி போலீஸ் குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் அக்கம்பக்கத்தினர், குழந்தை சாவில் மர்மம் உள்ளதாகவும்., இஸ்மாயில் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதாகவும் போலீசுக்கு சொன்னார்கள். இதையடுத்து, போலீசார் இஸ்மாயிலை பிடித்து விசாரித்தபோதுதான், கள்ள காதலும், கருணையற்ற கொலையும் வெளிச்சத்துக்கு வந்தது.

கைது

கைது

இறுதியில் மற்ற 2 மகன்களையும் ஹாஜியிடம் போலீசார் ஒப்படைத்தனர். இப்போது கள்ளக்காதலர்கள் ஜெயிலில் உள்ளனர். பெற்ற மகனையே அதுவும் மாற்று திறனாளி குழந்தையை கள்ளத்தொடர்புக்காக.. கழுத்தை நெரித்து தாய் செய்த காரியம் தெலுங்கானாவை அதிர்ச்சியில் உள்ளாக்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+