பக்கத்து வீட்டு சண்டை... 3 வயது சிறுவனை எரித்துக்கொன்ற தாயும் மகனும் கைது
பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட சண்டையில் மூன்று வயது சிறுவனை அடித்துக்கொலை எரித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் பழிக்குப் பழி வாங்குவதாக நினைத்து இதனை செய்துள்ளனர்.
போபால்: கடைக்கு சாக்லேட் வாங்கப்போன மூன்று வயது சிறுவனை கொன்று எரித்துள்ளனர். பக்கத்து வீட்டுக்காரரை பழிக்குப் பழி வாங்குவதற்காக இந்த கொலையை செய்த தாய் மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்கள் வீட்டில் திருடு போனதற்கு காரணம் பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் என்று நினைத்து சிறுவனை எரித்து கொன்றுள்ளனர்.
போபாலில் ஒரே குடியிறுப்பில் வசித்து வரும் விபின் மீனா, சுனிதாவிற்கு அடிக்கடி சண்டை வரும். பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்தாலும் பேசிக்கொள்ள மாட்டார்கள். கடந்த மாதம் சுனிதா வீட்டில் பணம் நகை கொள்ளை போனது. இதற்குக் காரணம் விபின் மீனாவின் குடும்பத்தினர்தான் என்று நினைத்து கோபப்பட்டார். பழிவாங்குவதற்காக சமயம் பார்த்து காத்திருந்தனர்.

விபின் மீனாவின் மூன்று வயது மகன் வருண் நேற்று சாக்லேட் வாங்குவதற்காக தனது தாத்தாவிடம் 10 ரூபாயை எடுத்துக்கொண்டு கடைக்குப் போனான், அப்போது சிலர் சிறுவன் வருணை கடத்திச்சென்றனர். கடைக்குப் போன பிள்ளையை காணவில்லையே என்று போலீசில் புகார் அளித்தனர். சிறுவனை தேடிப்பார்த்த போது மீனா வீட்டிற்கு அருகில் இருந்த காலி இடத்தில் சிறுவன் வருணை கொன்று எரித்திருந்தனர்.
கொல்லப்பட்ட சிறுவனின் சடலத்தைக் கண்டு மீனா அங்கேயே மயங்கி விழுந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரித்ததில் சுனிதாவும் அவரது மகன் சுபத்தும் இணைந்து இந்த படுபாதக செயலை செய்ததை கண்டுபிடித்தனர்.
சிறுவனை கொலை செய்த இருவரையும் கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் தங்களின் வீட்டில் களவு போனதற்குக் காரணம் மீனா வீட்டினர்தான் காரணம் என்று நினைத்து பழிக்குப் பழி வாங்குவதற்காக கொன்று எரித்துள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications