7 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த மகனை போலீசில் பிடித்துக் கொடுத்த தாய்!
பாட்னா: சிறுமியைப் பலாத்காரம் செய்த மகனைத் தாயே போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் டையமண்ட் ஹார்பர் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் பயின்று வரும் 7 வயது சிறுமி ஒருவர் சம்பவத்தன்று சிறுநீர் கழிப்பதற்காக வெளியில் வந்துள்ளார். அதனைக் கவனித்த நாஜீர் சேக் என்ற பேருந்து நடத்துனர் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து அந்தச் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், மது போதையில் வீட்டுக்குத் திரும்பிய நாஜீர், இந்தச் சம்பவம் பற்றி தனது தாயார் அய்நூர் பீவியிடம் உளறியுள்ளார். மகனின் செயல் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், மனசாட்சிப்படி நடந்து கொள்ள முடிவு செய்தார்.
உடனடியாக இது தொடர்பாக டையமண்ட் ஹார்பர் பகுதி போலீசில் புகார் அளித்த அய்நூர், பாதிக்கப்பட்ட சிறுமியையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். அய்நூர் அளித்த புகாரின் அடிப்படையில் நாஜீர் மற்றும் அவரது 3 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் போலீஸ் மூலமாகவே அச்சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்ததாக போலீஸ் அதிகாரி ருபந்தர் சென் குப்தா தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications