காலிபிளவர் பறித்த அம்மாவை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடூர மகன்.. பயந்து நின்ற ஊர் மக்கள்
புவனேஷ்வர் : ஈவு இரக்கமற்ற மகன் ஒருவர், தன் 70 வயது தாய்க்கு கொடுத்த தண்டனை காண்போரை நடுங்க வைத்துள்ளது. அதுவும் எதற்கு தெரியுமா? தனது தோட்டத்தில் இருந்து காலிபிளவரை பறித்ததற்காக இப்படி ஒருமோசமான தண்டனை கொடுத்துள்ளார். இதுபற்றி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியான நிலையில், போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெற்ற தாயை பாரமாக நினைக்கும் மகன்களும், மகள்களும் அதிகமாக இருக்கிறார்கள். சொத்து சம்பாதிக்காத, பணம் சேமிக்காத தாய் தந்தை கடைசி காலத்தில், மகனின் அல்லது மகளின் தயவை நாடி வாழ வேண்டிய நிலை மட்டும் வந்தால், மோசமான வலியை அனுபவிக்க வேண்டியதிருக்கிறது.

அதேபோல் பிள்ளைகளின் ஆசை வார்த்தைகளை நம்பி சேமித்த சொத்துக்களை, பணத்தை, நிலத்தை பிள்ளைகளுக்கு கொடுப்பதை போல் முட்டாள்தனம் எதுவுமே இல்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பெற்றோரை பணம் இருந்தால் மதிக்கிறார்கள். பணம் இல்லை என்றால், அவர்கள் உழைப்பை எதிர்பார்க்கிறார்கள். இரண்டில் ஒன்று கிடைக்காத நிலை இருந்ததால், பெற்றோரை மதிக்காதது மட்டுமல்லாமல், சித்ரவதை செய்கிறார்கள். இந்த கொடுமைகளை தடுக்க சட்டங்கள் இருந்தாலும், நடைமுறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே கசப்பான உண்மை. ஒடிசாவில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவமே அதற்கு உதாரணமாகும்.
ஒடிசா மாநிலம் கியாஜ்ஹர் மாவட்டம் உள்ள கிராமமம் சரசபசி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சாரதா. 70 வயதாகும் மூதாட்டியான இவர் கணவரை இழந்தவர் ஆவார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி சரசபசி கிராமத்திலேயே வசித்து வந்தனர். சாரதா தனது மூத்த மகன் கருணாவின் வீட்டில் வசித்து வருகிறார். அண்மையில் மூத்த மகன் கருணா நோய் காரணமாக இறந்துபோனார்
சாரதாவின் இளைய மகன் சஸ்துருகன் தனது மனைவியுடன் அதே கிராமத்தில் தனியே வசித்து வரும் நிலையில், சஸ்துருகனுக்கு கிராமத்தில் தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் காலிபிளவர் பயிரிட்டுள்ளார். இந்நிலையில், சாரதா நேற்று தனது இளைய மகன் சஸ்துருகனின் தோட்டத்தில் இருந்து சமைக்க காலிபிளவர் பறித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை கடுமையாக தாக்கியிருக்கிறார். அப்படியும் ஆத்திரம் அடங்காத சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை வீட்டிற்கு அருகே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார். மூத்த மகன் வீட்டில் வசித்து வந்து அவர்களுக்கு உதவியாக இருந்து வந்த சாராதாவை மகன் கடுமையாக தாக்கி கொண்டிருந்த நிலையில், அதை தடுக்க குடும்பத்தினர் முயன்றனர்.
மாமியாரை காப்பாற்றுவதற்காக சென்ற சஸ்துருகனின் மனைவியும் முயன்றுள்ளார் ஆனால் ஆத்திரத்தில் இருந்த சஸ்துருகன் மனைவியையும் கடுமையாக தாக்கியுள்ளார். யாரேனும் தடுத்தால் அவர்களையும் தாக்குவேன் என்று ஊர் மக்களை மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சஸ்துருகனிடமிருந்து அவரது தாயார் மற்றும் மனைவியை ஊர் மக்கள் புகுந்து மீட்டனர்.
மகன் தாக்கியதில் படுகாயமடைந்த சாரதா உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியான நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications