கைதான 11ம் வகுப்பு மாணவன் தந்தை பரபர பேட்டி.. 3ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதில் வழக்கில் புதிய திருப்பம் உருவாகி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். கழுத்தறுக்கப்பட்டு மரணம் அடைந்த அந்த சிறுவனின் பெயர் பிரத்தியுமான் தாக்குர்.
தனியார் பள்ளியில் நடந்த இந்த கொலையில் முதலில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆனால் தற்போது அந்த கொலையை செய்தது அதே பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் என கூறப்படுகிறது. மேலும் தேர்வு ஒத்திப்போக வேண்டும் என்பதற்காக கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பள்ளி கழிவறையில் கொலை
டெல்லியின் குர்கான் பகுதியில் இருக்கும் ரேயான் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரத்தியுமான் தாக்குர் என்ற மாணவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இதையடுத்து போலீசார் அந்த கொலை குறித்து விசாரணை செய்தனர்.போலீசார் அந்த பள்ளியின் சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் பாதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கழிவறையில் இருந்து வெளியே வந்தது தெரிய வந்து இருக்கிறது. மேலும் அந்த வீடியோவில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் அந்த சிறுவனை கொடூரமாக உள்ளே இழுத்து சென்றதும் பதிவாகி இருக்கிறது. இதையடுத்து அந்த கண்டெக்டர் கைது செய்யப்பட்டார்.

பள்ளி மாணவனும் சம்பந்தம்
அதன்பின் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த கொலையில் தற்போது புதிய திருப்பம் ஒன்று உருவாகி இருக்கிறது. அதன்படி இந்த கொலைக்கு அதே பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவனும் காரணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த கொலையில் முக்கிய குற்றவாளி அந்த பஸ் கண்டெக்டர் இல்லை இந்த மாணவன் தான் என கூறப்படுகிறது. இவனுடன் இன்னும் 5 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

காரணம் என்ன
இந்த கொலைக்கு தற்போது இரண்டுவிதமான காரணங்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலை பாலியல் துன்புறுத்தல் காரணமாக முதலில் நடத்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனபட்டது. ஆனால் பள்ளியில் நடக்க இருந்த தேர்வை நிறுத்துவதற்காகவே இந்த கொலை நடந்து இருப்பதாக புதிய காரணம் கூறப்படுகிறது. அந்த மாணவன் இறந்தால் பள்ளிக்கு விடுமுறை கிடைக்கும் என அப்படி செய்ததாக கூறுகிறார்கள்.

திட்டம் தீட்டப்பட்டதா
இந்த கொலையை செய்வதற்காக அந்த 11ம் வகுப்பு மாணவன் பல நாட்களாக முயற்சி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக அவன் பள்ளிக்கு தினமும் கத்தி எடுத்து வந்ததாகவும் அவன் நண்பர்கள் வாக்குமூலம் அளித்து இருக்கின்றனர். அவன் மிகவும் முரட்டுத்தனமான பையன் எனவும் சிலர் சிபிஐயிடம் தெரிவித்து இருக்கின்றனர்.

அந்த மாணவனின் பெற்றோர் மறுப்பு
இதுகுறித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவனின் பெற்றோர் கூறுகையில் "என் மகனின் உடலில் ஒரு துளி ரத்த கறை இல்லை. அவன் சட்டையிலும் அதற்கான அடையாளம் இல்லை. அதேபோல் அந்த கண்டெக்டரும் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். ஆனால் இப்போது என் மகனை ஏன் கைது செய்து இருக்கிறார்கள் என தெரியவில்லை'' என்றனர். மேலும் அவர்கள் இதற்கு எதிராக வழக்கு தொடுக்கவும் உள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications