2 சமோசா எவ்வளவு?.. ரூ. 20 கொடு.. 15 தானே.. அடுத்து நடந்த பயங்கரம்.. மனிதாபிமானமே இல்லையா!

சமோசா விலைக்காக ஒரு இளைஞர் தீக்குளித்து இறந்துவிட்டார்

Subscribe to Oneindia Tamil

போபால்: மனித உயிர்களின் மதிப்பு எவ்வளவு மலிவாகி விட்டது என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.. மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், அனுப்புர் மாவட்டத்தில் அமர்கன்டக் என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள பந்தா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. அதே பகுதியில் உள்ள சமோசா கடைக்கு இவர் தினமும் செல்வாராம்.. வழக்கமாக அங்கேதான் சமோசா சாப்பிடுவாராம்.

MP Man dies by suicide after fight with shopkeeper over samosa price

சம்பவத்தன்றும், நண்பரை அழைத்து கொண்டு அந்த கடைக்கு சென்றிருக்கிறார்.. 2 சமோசா வாங்கியுள்ளார்... 2 சமோசாவுக்கு 20 ரூபாய் கடைக்காரர் கேட்டிருக்கிறார்.. ஆனால், இளைஞரோ, 15 ரூபாய்தானே? என்று கேட்டுள்ளார்.

அதற்கு கடைக்காரர், 5 ரூபாய் விலை ஏறிடுச்சு என்று சொன்னார்.. இதை கேட்டு ஆத்திரமடைந்த இளைஞர், திடீர்னு இவ்ளோ விலை உயர்த்தினால் எப்படி? நான் 15 ரூபாய்தான் வழக்கம்போல தருவேன் என்று வாக்குவாதம் செய்துள்ளார். பதிலுக்கு கடைக்காரரும் விடாமல் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால், வியாபாரம் பார்க்க விடாமல், கடையில் வந்து தகராறு செய்வதாக கூறி, பக்கத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் கடைக்காரர் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் இளைஞரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்...

ஆனால், மனவேதனை அந்த அடைந்த இளைஞர், அடுத்த கொஞ்ச நேரத்திலேயே, தன் உடம்பில் பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்... இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அனுப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது... நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது, சமோசாவுக்காக தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+