படிப்பை நிறுத்த மறுத்த 11 வயது மகளின் முகத்தை சிதைத்த கொடூர தந்தை
போபால்: பள்ளிப் படிப்பை நிறுத்த மறுத்த 11 வயது மகளின் முகத்தை தந்தையே சிதைத்த கொடூரம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள மரஞ்ஹிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் உய்கே. அவரது 11 வயது மகள் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். தினேஷுக்கு தனது மகள் படிப்பது பிடிக்கவில்லை. அதனால் படிப்பை நிறுத்திவிடுமாறு கூறி வந்துள்ளார்.
ஆனால் சிறுமி தினேஷின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார். இதனால் கடுப்பான தினேஷ் கல்லை எடுத்து தனது மகளின் முகத்தை சிதைத்துவிட்டு தலையிலும் அடித்து காயப்படுத்தினார். இதையடுத்து சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு விறகு விற்கப் போகுமாறு என் தந்தை கூறி வந்தார். பல முறை நாள் முழுவதும் சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவார். நான் தொடர்ந்து படித்து வந்ததால் என்னை கொடுமைப்படுத்தி வந்தார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் தினேஷை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications