என்னாது யூனிபார்ம் தைக்கலியா?.. அப்போ துணியே இல்லாம நிர்வாணமா வாங்க.. பள்ளி முதல்வரின் ஆபாச பேச்சு
போபால்: மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்திற்குள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்திற்குள்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு முதல்வராக இருப்பவர் ராதேஷ்யாம் மாளவியா.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளிக்கு சீருடை அணியாமல் வந்துள்ளனர். இதை கவனித்த பள்ளி தலைமையாசிரியர் ஏன் சீருடை அணியவில்லை என கேட்டுள்ளார். அதற்கு மாணவிகள் எங்களின் சீருடை இன்னும் டெய்லர் கடையில் இருக்கிறது. இன்னும் தைக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.

மாணவர்கள்
ஆனால் இதை அவர் ஏற்கவில்லை. அதற்கு அவர் அந்த மாணவிகளை ஆபாசமாக பேசியுள்ளார். ஃபேஷனாக உடை அணிந்து மாணவர்களைக் கெடுப்பதே நீங்கதான். பள்ளி சீருடை இல்லாவிட்டால் நிர்வாணமாக பள்ளிக்கு வாங்க என மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார்.

பெற்றோரிடம் புகார்
இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர் பள்ளி முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து போலீஸார் புகாரின் பேரில் பள்ளி முதல்வர் ராதேஷ்யாம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விவகாரம்
தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள். அது போல் துறை ரீதியான நடவடிக்கைக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரை இடைநீக்கம் செய்துள்ளது. பள்ளி ஆசிரியர்கள் தவறு செய்தால் பள்ளி முதல்வரிடம் போய் முறையிடலாம். ஆனால் இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வரே தவறு செய்துள்ளார்.

மூடப்பட்ட பள்ளிகள்
கொரோனா காலத்தில் மூடப்பட்ட பள்ளிகள் இப்போதுதான் ஒவ்வொரு மாநிலமாக திறக்கப்பட்டு வருகின்றன. அதுவும் அந்த மாநிலத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறதா என்பதை பார்த்து திறக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் இத்தனை மாதங்களாக திறக்கப்படாமல் இருந்ததால் பள்ளி திறக்கும் போது ஒரே நேரத்தில் நிறைய பேர் கொடுத்ததால் சீருடைகளை தைப்பதில் தாமதமாகி விட்டது. இந்த சிறிய நுணுக்கங்களை கூட தெரியாத ஒருவர் பள்ளி முதல்வராக இருக்கிறார். எல்லாம் காலக் கொடுமை! எல்லா மாணவ மாணவிகளும் நம் குழந்தைகள் என எண்ணாமல் சிறிதும் கூச்சமில்லாமல் இப்படி பேசுவதற்கு அந்த பள்ளி முதல்வருக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என கேட்கிறார்கள் குழந்தையின் பெற்றோர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications