விவசாயிகளை உயிருடன் அனுப்ப மத்திய அரசின் உடனடி நடவடிக்கை தேவை: திருச்சி சிவா
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை உயிருடன் அனுப்ப மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை உயிருடன் அனுப்ப மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். நாடே திரும்பி பார்க்கும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
டெல்லியில் கிட்டதட்ட ஒருமாதமாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் ஒவ்வொரு நாளும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமரை சந்திக்க வைப்பதாக அழைத்து சென்ற டெல்லி போலீசார் யாரோ ஒரு அதிகாரியிடம் விவசாயிகளின் கோரிக்கை மனுவை அளிக்குமாறு கூறியுள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த விவாசாயிகள் பிரதமர் அலுவலகம் எதிரே சாலையில் ஆடையின்றி உருண்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி திருச்சி சிவா விவசாயிகள் போராட்டத்தை நாடே திரும்பி பார்க்கும் நிலையில் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை விவசாயிகளை சந்திக்கவில்லை என்றும் திருச்சி சிவா தெரிவித்தார்.
மேலும் தமிழக விவசாயிகளை உயிருடன் அனுப்ப மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications