கொரோனா பாதிப்பு.. திடீர் மூச்சு திணறல்.. 34 வயதில் உயிரிழந்த 'மிஸ்டர் இந்தியா' ஆணழகன்
காந்திநகர்: 'மிஸ்டர் இந்தியா' ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட்(34) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் பல முக்கிய நபர்களை இழந்து வருகிறோம். கொரோனா 2ஆம் அலை முதல் அலையைக் காட்டிலும் தீவிரமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், 'மிஸ்டர் இந்தியா' ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட் (34) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் தான் ஜெகதீஷ் லாட்டிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனால் அவர் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 4 தினங்களுக்கு முன், அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது மனைவியும் மகளும் மருத்துவமனையில் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தனர். அவரது உடல்நிலை விரைவாக தேறிவிடும் என்றே அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனிற்றி, ஜெகதீஷ் லாட் நேற்று உயிரிழந்தார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம், மிஸ்டர் இந்தியா போட்டியில் இரு முறை தங்கப் பதக்கம் ஆகியவற்றை வென்ற ஜெகதீஷ் லாட், மகாராஷ்டிராவைப் பூர்விகமாகக் கொண்டவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குஜராத்திற்குக் குடிபெயர்ந்த இவர், வதோதராவில் சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தி வந்தார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக14,605 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல ஒரே நாளில் கொரோாவால் 173 பேர் குஜராத்தில் உயிரிழந்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications