பணக்காரருக்கான பந்தாவே துளியும் இல்லையே! என்ன பணிவு! ஏழை கொடுத்த உணவை சுவைத்த முகேஷ் அம்பானி
காந்திநகர்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்ட் ஆகியோரின் திருமணத்தையொட்டி குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள 51 ஆயிரம் கிராம மக்களுக்கு அறுசுவை விருந்து படைக்கப்பட்டது. அப்போது ஒருவர் தயாரித்து கொண்டு வந்த உணவை எந்த வித பந்தாவும் இன்றி முகேஷ் அம்பானி சுவைத்தார்.
இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி- நீடா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. தனது எடையை 6 மாதங்களில் 100 கிலோ வரை குறைத்து இணையத்தில் பேசும் பொருளானார்.

இந்த நிலையில் இவருக்கும் இவருடைய தோழியும் என்கோர் நிறுவனத்தை சேர்ந்த ராதிகா மெர்சன்ட்டுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரது திருமணத்திற்கும் பெற்றோர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு இருவருக்கும் குஜராத்திய முறைபடி கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் அவர்களது திருமணம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறுகிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜாம்நகரில் கிரீன்ஸ் என்ற ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில்தான் இவர்களுக்கு இந்த திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்காக ஜாம் நகரே விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் மகனின் திருமணத்தையொட்டி அப்பகுதி கிராம மக்களுக்கு விருந்து வைக்க முகேஷ் அம்பானி முடிவு செய்திருந்தார். அதன்படி நேற்றைய தினம் 51 ஆயிரம் கிராமமக்களுக்கு அறுசுவை விருந்து படைக்கப்பட்டது.

இந்த விருந்தில் முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் ஆகியோர் தங்கள் கைகளால் உணவை பரிமாறினர். சிரித்த முகத்துடன் உணவை வழங்கிய நிலையில் மக்கள் வயிறார சாப்பிட்டு மனதார வாழ்த்தினர். மேலும் தம்பதிக்கு சிலர் பரிசு பொருட்களையும் கொண்டு வந்திருந்தனர்.
அது போல் அந்த கூட்டத்தில் ஒருவர் முகேஷ் அம்பானிக்கு தன் கையால் சமைத்த உணவை கொடுத்தார். அதை முகேஷ் அன்போடு சுவைத்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் மணப்பெண்ணின் பெற்றோர் விரேன் மெர்ச்சன்ட் மற்றும் சைலா மெர்ச்சன்டும் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து குஜராத்தி பாரம்பரிய நடனமும் அரங்கேறியது. இந்த உணவு நிகழ்ச்சி அடுத்த 4 நாட்களுக்கும் நடைபெறுகிறது. ராதிகா மெர்சன்ட் விருந்து நிகழ்ச்சிக்கு வந்த குழந்தைகளிடம் விளையாடி மகிழ்ந்தார். நாளை நடைபெறும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் 1000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்வுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மெலிந்தா கேட்ஸ், மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், அடோப் சிஇஓ சாந்தனு நாராயண், ஆல்ஃபாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, வால்ட் டிஸ்னி சிஇஓ பாப் ஐகர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications