ஊருக்கே ராஜானாலும் பேரனுக்கு தாத்தாவாச்சே! முகேஷ் அம்பானிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?
மும்பை: தனது மகன், மருமகள், பேரன் புடைச்சூழ மும்பை சித்தி விநாயகர் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது தனது பேரனுக்கு அரணாக மாறி அழைத்து வந்த காட்சி வைரலாகி வருகிறது.
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவருடன் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, அவருடைய மனைவி ஸ்லோகா, அவர்களுடைய குழந்தை பிருத்வி அம்பானி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

நீடா அம்பானி வரவில்லை. ஸ்லோகா அம்பானி தற்போது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவருக்கு ஏற்கெனவே பிருத்வி அம்பானி என்ற மகன் உள்ளார். பொதுவாக அம்பானி வீட்டு நிகழ்வுகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவரும்.
அது போல் இவர்கள் சுவாமி தரிசனம் செய்த வீடியோவும் வைரலானது. மும்பை சித்தி விநாயகர் கோயிலுக்கு வந்திருந்த அம்பானி வெள்ளை நிற குர்தா அணிந்திருந்தார். ஆகாஷ் அம்பானி டி சர்ட் அணிந்து ஷார்ட்ஸில் வந்திருந்தார். மருமகள் ஸ்லோகா இளஞ்சிவப்பு நிற ஆடையில் எளிமையாக காட்சியளித்தார்.

கோயிலுக்கு வந்த போது எந்தவித பணக்கார தோற்றமும் இல்லாமல் சாதாரணமானவர்களை போல் உடையணிந்து வந்தார்கள். அவர்களுக்கு 30 பேர் பாதுகாப்பு வழங்கினார்கள். எனினும் முகேஷ் அம்பானி தனது பேரன் பிரித்விக்கு அரணாக இருந்து அவரை பாதுகாப்பாக தூக்கி வந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கோயிலுக்குள் அவர் வருவதற்கு முன்னர் பூஜைக்கு தேவையான பூ, பழம், தேங்காய் ஆகியவை கொண்டு வரப்பட்டது. பின்னர் முகேஷ் அம்பானிக்கு அங்கிருந்தவர்கள் வணக்கம் கூறினர். அவரும் சிரித்தபடியே வணக்கம் கூறினார், மருமகள் ஸ்லோகாவும் அங்கிருந்த கோயில் அர்ச்சகர்களுக்கு இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

பின்னர் அவர்களுக்கு செந்தூரம் வழங்கப்பட்டது. இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு கோயிலை விட்டு வீடு திரும்பினர். ஏற்கெனவே கோயிலுக்கு வந்தோருக்கு எந்த கால தாமதத்தையும் கொடுக்காமல் வந்தவுடனேயே சுவாமியை பார்த்துவிட்டு சென்றுவிட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நீடா அம்பானியின் கலாசார மையத்தின் தொடக்க விழா கொண்டாட்டத்தில் அம்பானியின் மூத்த மருமகள் ஷ்லோகா தனது இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்தார். கடந்த வாரமும் அம்பானி குடும்பத்தினர் விநாயக பெருமானின ஆசிர்வாதத்தை பெற்றனர். தற்போது உலக பணக்காரரானாலும் தனது பேரக் குழந்தையை தூக்கிக் கொண்டு கோயிலுக்கு வந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் பார்த்து வியந்தனர்.













Click it and Unblock the Notifications