For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாரணாசியில் மோடிக்கு எதிரான வாக்குகள் பிரியாமல் இருக்க போட்டியில்லை: முக்தார் அன்சாரி

By Mathi
Google Oneindia Tamil News

Mukhtar Ansari opts out of contest against Narendra Modi in Varanasi
வாரணாசி: லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடிக்கு எதிரான வாக்குகள் பிரியாமல் இருக்க குவாமி ஏக்தா தளத்தின் முக்தார் அன்சாரி தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் முக்தார் அன்சாரி. இவர் பா.ஜனதா வேட்பாளர் முரளி மனோகர் ஜோஷிக்கு கடும் போட்டியை உருவாக்கியதுடன், வெறும் 17 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.

பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகிய அவர், குவாமி ஏக்தா தளம் என்ற கட்சியைத் தொடங்கினார். பா.ஜனதா எம்.எல்.ஏ. கொலை வழக்கில் தற்போது அவர் ஆக்ரா சிறையில் உள்ளார்.

வாரணாசியில் நரேந்திர மோடி போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து முக்தார் அன்சாரி போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் தாம் போட்டியிட மாட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார். மதச்சார்பற்ற ஓட்டுகள் பிரியக்கூடாது என்பதற்காக இம்முடிவை அவர் எடுத்துள்ளார்.

English summary
Jailed mafia don-turned-politician and independent legislator Mukhtar Ansari, who had earlier declared that he would also take a plunge in the electoral battle at Varanasi and contest against BJP PM nominee Narendra Modi, withdrew his candidature from the high-profile seat on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X