முகுல் ராய் வெறும் டிரெய்லர் தான்.. மெயின் பிக்ஸரே இனிதான்.. பாஜக மொத்தமா சரிய போகுது.. மம்தா அதிரடி
கொல்கத்தா: 'முகுல் ராய் நமது மகன். அவர் தன்னுடைய வீட்டுக்குதான் வந்துள்ளார்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜக பக்கம் தாவினார்கள்.

பாஜக தலைவர்கள்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், நிர்வாகிகள் என பல முக்கிய தலைவர்கள் வரிசையாக பாஜகவுக்கு சென்றனர். ஆனால் தேர்தல் முடிவுகள் இதற்கு எதிர்மாறாக இருந்ததால் '' ஏன் இங்கு தேவையில்லாமல் வந்தோம்'' என்று பாஜகவுக்கு தாவிய தலைவர்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர்.

மீண்டும் வந்தார் முகுல் ராய்
இந்த சிந்தனை இன்று முதல் நடைமுறைக்கு வர தொடங்கி விட்டது. கடந்த 2017-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு கரை ஒதுங்கிய மூத்த தலைவர் முகுல் ராய் இன்று மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார்.திரிணாமுல் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மம்தாவின் மருமகனும், தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் ஆரவாரத்துடன் தாய் கழகத்தில் மீண்டும் ஐக்கியமானார் முகுல் ராய்.

சீட்டு கட்டுபோல் சரிய போகிறது
மூத்த முகுல் ராய் வருகையால் மம்தா பானர்ஜி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் புன்னகை ததும்ப கூறுகையில், ' முகுல் ராய் நமது மகன். அவர் தன்னுடைய வீட்டுக்குதான் வந்துள்ளார்' என்றார். இப்போதுதான் முகுல் ராய் ஆரம்பித்து வைத்துள்ளார். இனிமேல் மேற்கு வங்க பாஜக சீட்டுக்கட்டு போல் சரியும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

சுவேந்து அதிகாரியுமா?
மம்தா பானர்ஜி கூறியது போல் பாஜகவில் இருக்கும் பலர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மம்தாவின் முன்னாள் நண்பனும், இந்நாள் எதிரியுமான சுவேந்து அதிகாரியும் மீண்டும் மம்தாவிடம் ஐக்கியமாக யோசனை செய்து வருவதாக தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications