முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்ற தீ்ர்ப்பையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் தற்போது அம்மாநில அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.
அத்துடன் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கேரள சட்டசபையை கூட்டி பற்றி விவாதிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் தற்போது திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications