இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சப் இன்ஸ்பெக்டர்
மும்பை: மும்பை அருகே காவல் நிலையத்தில் வைத்து தனது உயரதிகாரியைச் சுட்டுக் கொன்று விட்டு துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அதே துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அருகேயுள்ள வோகேலா என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் சீனியர் இன்ஸ்பெக்டர் விலாஸ் ஜோசி என்பவருக்கும், துணை இன்ஸ்பெக்டர் திலிப் என்பவருக்கும் இடையே வருகைப்பதிவு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த திலீப் தனது துப்பாக்கியால் ஜோசியை நோக்கி சுட்டுள்ளார். இதில் ஜோடிக்கு தோளிலும், மற்றொரு போலீசுக்கு தொடைப்பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு திலீப் தற்கொலை செய்து கொண்டார்.
படுகாயமடைந்த ஜோசி மற்றும் மற்றொரு போலீஸ்காரரை மற்ற அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோசி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு போலீஸ்காரருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் இரவுப் பணிக்கு திலீப் வரவில்லையாம். இதனால், அவரது வருகைப்பதிவேட்டில் ஆப்செண்ட் என ஜோசி குறித்துள்ளார். மறுநாள் பணிக்கு வந்த திலீப் இது தொடர்பாக ஜோசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக மும்பை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications