சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் நீட்டா அம்பானி தேர்வு
டெல்லி: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீட்டா அம்பானி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெறுமை நீட்டா அம்பானிக்கு கிடைத்துள்ளது.
2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் செயல்திட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான புதிய நடைமுறையின்படி இவர் தனிப்பட்ட முறையில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக ஐஓசி கூட்டம் வரும் ஆகஸ்ட் 2 முதல் 4 வரை பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ளது. அப்போது ஐஓசி உறுப்பினராக நீட்டா அம்பானி முறைப்படி தேர்வு செய்யப்படுவார். இந்த உறுப்பினர் பதவிக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டால் 70 வயது வரை அந்த பதவியில் நீடா அம்பானி நீடிக்க முடியும்.
இந்த பதவிக்கு இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமை நீட்டா அம்பானிக்கு கிடைத்துள்ளது. இவர் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக இந்த பெருமை கிடைத்துள்ளது. குறிப்பாக கால்பந்து மற்றும் கூடைபந்து போட்டியை அடிமட்ட நிலையில் இருந்து ஊக்குவிக்க முக்கிய காரணமாக இருப்பதால் இவரை தேர்வு செய்துள்ளனர்.
இதுகுறித்து நீட்டா அம்பானி கூறுகையில், ஐ.ஓ.சி. உறுப்பினர் பதவி வேட்பாளருக்கு என்னை தேர்வு செய்தது, உண்மையிலேயே எனக்கு கிடைத்த பெரிய மரியாதை. எனது பெயரை பரிந்துரை செய்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அடிமட்ட சமூகத்தினருக்கு விளையாட்டை எப்படி கொண்டு சேர்க்க முடியும் என்பதில் எனது நிறுவனம் செயல்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications