மும்பை போலிஸில் சிக்கிய "மியாவ் மியாவ் பேபி"...!
மும்பை: மும்பை போலீஸாரை கலக்க வந்த சசிகலா என்கிற பேபி படங்கரை ஒரு வழியாக மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மிகப் பெரிய போதைக் கும்பலின் தலைவிதான் இந்த பேபி.
இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. மும்பை முழுவதும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் நம்பர் ஒன் புள்ளியாக இருந்து வந்தவர் பேபி. இதன் மூலம் பல கோடி அளவுக்கு சொத்துக்களையும் குவித்துள்ளார். இவருக்கென்று மும்பையிலும், மகாராஷ்டிராவின் இதர பகுதிகளிலும் பல சொத்துக்கள் உள்ளன.

போலீஸாருடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டு சிக்காமல் தப்பி வந்த இவர் குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கவே இவரைக் கைது செய்ய போலீஸார் களம் இறங்கினர். இதையடுத்து தலைமறைவானார் பேபி.
கடந்த ஒரு மாதமாக இவரை 10 தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். தற்போது சசிகலா சிக்கியுள்ளார். அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மியாவ் மியாவ்!
இவர் மெபட்ரின் என்ற போதைப் பொருளை விற்பனை செய்வதில் கில்லாடி ஆவார். இந்தப் போதைப் பொருளுக்கு மியாவ் மியாவ் என்று செல்லப் பெயர் உண்டு.
பேபி, மும்பை போலீஸ்காரர் தர்மராஜ் கலோகேவின் கள்ளக் காதலி ஆவார். பேபியின் போதை வியாபாரத்திற்கு தர்மராஜும் உடந்தையாக இருந்து வந்தார். அவரை கடந்த மாதம் போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 126 கிலோ போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பேபி தலைமறைவானார். தற்போது அவரை போலீஸார் பன்வெல் என்ற இடத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
சிந்துதுர்க் என்ற இடத்திலிருந்து பஸ் மூலம் மும்பைக்கு வந்து கொண்டிருந்தபோது பேபியை போலீஸார் கைது செய்தனர்.
பேபியிடம் போலீஸார் விசாரணை நடத்தும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications