திருடப்படும் வெங்காயம்… தங்கம் போல பாதுகாப்பு தரும் போலீஸ்
மும்பை: மும்பையில், காய்கறி மொத்த கடையில் நுழைந்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 300 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்திய உணவு வகைகளில், அத்தியாவசியமாக இடம்பெறும் வெங்காயத்தின் விலை, கிலோவுக்கு, 100 ரூபாய் என்ற அளவில், நாட்டின் முக்கிய நகரங்களில் விற்கப்படுகிறது.
இன்னும் விலை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதால், விற்பனைக்கு வைத்திருக்கும் வெங்காயத்தை, மொத்த வியாபாரிகள் பதுக்கி, செயற்கையாக விலையேற்றத்தை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மும்பை, வாஷி பகுதியில், வெங்காயத்திற்கு ஏக கிராக்கி இருப்பதை அறிந்த திருடர்கள் இருவர், செவ்வாயன்று அதிகாலை, காய்கறி மொத்த கடைக்குள் நுழைந்து, அங்கு குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டிருந்த, ஆறு மூட்டைகளை திருடிச் சென்றனர்.இதை அறிந்த கடைக்காரர், போலீசில் புகார் கொடுத்தார். அதில், 'பிற, காய்கறிகள், பொருட்கள் அப்படியே இருக்கையில், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெங்காயத்தை மட்டும் காணவில்லை' என, தெரிவித்துஇருந்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தேவா மஜும்தார், 20, சலிம் சேஷக், 19, என்ற இருவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்தால், தங்கத்திற்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, வெங்காயத்திற்கும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என, வியாபாரிகள் அஞ்சுகின்றனர்.
'வெங்காயத்தின் விலை இப்படியே உயர்ந்து சென்றால், வெங்காயம் விற்பனை செய்யும் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி வந்தாலும் வந்து விடும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications