மும்பையில் இன்றும் தொடரும் கனமழை... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை #MumbaiRains
மும்பையில் இன்றும் கனமழை தொடரும் என்பதால் அந்த நகரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை: மும்பையில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த இரு தினங்கள் பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. ரயில், பேருந்து, வாகன போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகியுள்ளது. அது இன்று மதியம் குஜராத்தை நோக்கி சென்று அரபிக் கடலை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போகும்போது மிகவும் கனமழையுடன் ஒரு பிரளயத்தையே உண்டுசெய்யும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று்ம பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மும்பை பல்கலைக்கழகத்துக்கு இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலையுடன் இணைக்கப்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மின்சார துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட மிகவும் முக்கிய துறைகளில் பணியாற்றுவோர் மட்டும் இன்று பணியாற்றுவர். ஏனையவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications