செளதி அரேபியாவுக்கான இந்திய தூதராக மும்பை போலீஸ் கமிஷனர் அஹமது ஜாவேத் நியமனம்
டெல்லி: செளதி அரேபியாவுக்கான இந்திய தூதராக மும்பை போலீஸ் கமிஷனர் அஹமது ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் செளதியும் ஒன்று. இந்தியர்கள் கணிசமான அளவில் அங்கு பணியாற்றுகின்றனர்.

அண்மையில் டெல்லியில் உள்ள செளதி அரேபிய தூதரக அதிகாரிகள் மீது பலாத்கார புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து இருநாட்டு உறவில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் செளதி அரேபியாவுக்கான புதிய தூதராக அஹமது ஜாவேத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
தற்போது மும்பை போலீஸ் கமிஷனராக உள்ள ஜாவேத் வரும் ஜனவரியில் ஓய்வு பெற உள்ளார். இவர் 1980ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் பேட்ஜை சேர்ந்தவர்.
கடந்த செப்டம்பரம் மாதம் சர்ச்சைக்குரிய ஷீனா போரா வழக்கை விசாரித்த மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தூக்கியடிக்கப்பட்டு அஹமது ஜாவேத் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications