மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு செப்.30-ல் தண்டனை அறிவிப்பு
மும்பை : ஜூலை 11, 2006-ம் ஆண்டு மும்பையை உலுக்கிய மின்சார ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை மகாராஷ்டிர நீதிமன்றம் இம்மாதம் 30-ம் தேதி அறிவிக்கிறது.
குற்றவாளிகள் 12 பேரில் 8 பேருக்கு மரண தண்டனையும், மீதி 4 பேருக்கு குறைந்தது 60 ஆண்டுகள் சிறைக்கான ஆயுள் தண்டனையும் விதிக்க அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

கமல் அன்சாரி, தன்வீர் அன்சாரி, ஃபைசல் ஷெய்க், எதீஷாம் சித்திகி, மொகமது அலி ஷெய்க், சாஜித் அன்சாரி, நவீத் கான், அசிப் பஷீர் கான் என்கிற ஜுனைத் ஆகிய 8 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மஜித் மொகமது ஷஃபி, முஸான்மில் ஷெய்க், சுஹைல் ஷெய்க், ஜமீர் ஷெய்க் ஆகியோருக்கு 60 ஆண்டுகளுக்குக் குறையாத ஆயுள் தண்டனை கோரப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் திருந்தவில்லை என்றும் எதிர்காலத்தில் திருந்தும் வாய்ப்பும் இல்லை என்றும் குற்றத்திற்காக அவர்கள் ஒரு போதும் வருந்தவில்லை என்றும் நீதிமன்றத்தில் தங்கள் வாதத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள், முன்வைத்தனர்.
அவர்களது உடல்நலமின்மை, சமூக-பொருளாதார பின்னணிகள், சிறையில் கல்வி, குடும்பச் சூழல் ஆகியவை இவர்களது தீவிரத்தைக் குறைக்கும் அல்லது தடுக்கும் சூழ்நிலைகளாக பரிசீலிக்கப் பட முடியாதது என்றும் அரசுத் தரப்பு கோரியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications