இ்ந்த உயரம் போதுமா... இல்லை அதுக்கும் மேல... மும்பையில் தயாராகும் “ஒன் டவர் அபார்ட்மெண்ட்ஸ்”!
மும்பை: உலகிலேயே மிக உயரமான குடியிருப்பு கட்டிடமாக மும்பையில் வேர்ல்டு ஒன் டவர் அபார்ட்மெண்ட்டுகள் கட்டப்பட்டு வருகிறது. 1,456 அடி உயரத்தில் ரூபாய் 2 ஆயிரம் கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் எக்ஸ்கிளூசிவ் பிராப்பர்ட்டியாக விற்பனையாகி வரும் இந்த அபார்ட்மெண்ட்டை இந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான லோதா டெவலப்பர்ஸ் ரூபாய் 2 ஆயிரம் கோடி செலவில் மத்திய மும்பையின் அப்பர் வோர்லி பகுதியில் உருவாக்கி வருகிறது.
ஜியார்க்கியோ அர்மானி டிசைனிங்கில் உருவாக்கப்பட்டு வரும் இந்த வேர்ல்டு ஒன் அபார்ட்மெண்ட்டில் ஜிம், நீச்சல் குளம், கிரிக்கெட் பிட்ச், பெவிலியன் உள்ளிட்ட சொகுசு வசதிகளும் உள்ளன. இதிலுள்ள பிளாட்டுகளில் விஸ்தாரமான ரூம், கிச்சன், ப்ரெக்பஸ்ட் ரூம், சொகுசான பெட்ரூம், அழகிய டிசைனிங் வேலைகளுடன் கூடிய சுவர்கள் இடம்பெற்றுள்ளன.
ரிலாக்ஸ் செய்வதற்காக டவரின் உச்சியில் இரண்டு அகலமான போடியம்களும் அமைக்கப்படுகிறது. பிளாட்டுக்களுக்கான புக்கிங் ஓப்பன் ஆகியுள்ள நிலையில் ரூபாய் 13 கோடி ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மிகப்பெரிய பணக்காரர்களுக்கு மட்டுமே இந்த அபார்ட்மெண்டில் பிளாட் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், லண்டனில் தற்போது பொருளாதாரம் மீண்டும் மீட்சி பெற துவங்கியுள்ளதால் அங்குள்ள ஹை-எண்டு ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டுகள் பிளாட்டுகளை இப்போதே விற்க துவங்கியுள்ளனர்.
குறிப்பாக, அவ்வப்போது இந்தியாவுக்கு சில மாதங்கள் வந்து செல்லும் ஹை நெட்வொர்த் இந்தியன்ஸ் அதாவது இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு விற்பனையில் முன்னுரிமை தரப்படுகிறது.
117 மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானப்பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முழுமையாக முடிந்துவிடும்.












Click it and Unblock the Notifications