இடுக்கி நிலச்சரிவு.. மூணாறில் தொடரும் சோகம்.. மேலும் 3 உடல்கள் மீட்பு.. பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு!
இடுக்கி: மூணாறில் நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் இருக்கும் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அங்கு இருக்கும் ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு மொத்தமாக வழியில் இருந்த வீடுகளை மண் மூடியது.
மொத்தம் 20 வீடுகள் வழியில் இருந்தது. இந்த வீடுகள் எல்லாம் மொத்தமாக மணல் மூடியது. இதில் 83 பேர் வரை மணலுக்கு உள்ளே சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பலி எண்ணிக்கை
மூணாறில் நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மீட்கப்பட்ட 3 உடல்களும் ஆண் உடல்கள். இவர்கள் மூவரும் தமிழர்கள் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

இன்னும் பலர்
இந்த பகுதியில் இன்னும் 19 உடல்கள் சிக்கி உள்ளது. இவர்கள் ஆழமான இடத்தில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இங்கு மீட்பு பணி நடக்கிறது. இருந்தும் கூட உடல்களை மீட்க முடியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை 70ஐ தாண்ட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது .

தமிழ் குடும்பம்
இந்த நிலச்சரிவில் தமிழர்கள் பலர் சிக்கி தவித்து வருகிறார்கள். இதுவரை 32 தமிழர்கள் இந்த நிலச்சரிவில் பலியாகி உள்ளனர். எல்லோரும் அங்கு தேயிலை தோட்ட பணிகளை செய்யும் மக்கள். அந்தப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலர் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அங்கேயே சிறிய சிறிய வீடுகளை கட்டி வசித்து வருகிறார்கள்.
Recommended Video

மரணம்
மலை முகடுகளில் இவர்கள் வீடுகளை கட்டி உள்ளனர். அங்கு தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளது. இரவு முழுக்க பெய்த மழையால், மீட்பு பகுதியில் சேறு மூடி, மீட்பு பணியை தாமதமாக்கி உள்ளது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
கேரள லாட்டரியில் ரூ.1 கோடி + 25 லட்சம்.. எர்ணாகுளத்திற்கு அடுத்தடுத்து பரிசு மழை! வின்னர் யார்? -
கேரளாவில் அரசு பேருந்துகளில் இனி இலவச பயணம்! சாதனை உத்தரவில் கையெழுத்திட்ட பெண் செயலாளர்! சூப்பர் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி!












Click it and Unblock the Notifications