Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்கை டைனிங் கிரேன் பழுது..120 அடி உயரத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்.. மூணாரில் நடுநடுங்கும் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

இடுக்கி: கேரளாவில் இயற்கை சீற்றங்களுக்கும், சுற்றுலாவுக்கும் என்றும் பஞ்சமிருக்காது. அழகு நிறைந்த இடத்தில் ஆபத்தும் அதிகம் என்ற பழமொழி கேரளாவிற்கு நன்கு பொருந்தும். இந்நிலையில் இடுக்கி மாவட்டம் கேரளாவில் 120 அடி உயரத்தில் உணவருந்தும் ஸ்கை டைனிங் உணவகம் உள்ளது. கிரேனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அங்கு உணவருந்த சென்ற சுற்றுலா பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அந்தரத்தில் சிக்கி தவித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கடவுளின் தேசமான கேரளா மாநிலத்தில் சுற்றுலாவுக்கு ஏராளமான பகுதிகள் உள்ளன. கடல் பிரதேசம், மலைப்பிரதேசம் என்று எந்த சுற்றுலாவாக இருந்தாலும் சுற்றுலா பயணிகளின் முதன்மை தேர்வாக கேரளா உள்ளது. வயநாடு, இடுக்கி மாவட்டங்கள் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள்.

Munnar Sky Dining

அந்தரத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்

அவர்களை கவரும் விதமாக புதிய மற்றும் சாகச அனுபவங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். ரிசார்ட், உணவகம் என்று எல்லாவற்றிலும் போட்டியாளர்கள் அதிகம் இருப்பதால் வாடிக்கையாளர்களை கவர புதிய நுணுக்கங்களை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் மூணாறு அருகே அனச்சல் பகுதியில் ஸ்கை டைனிங் (Sky Dining) என்கிற உணவகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. கிரேன் மூலம் 120 அடி உயரத்தில் நிலை நிறுத்தப்பட்ட கூண்டில், சுற்றுலா பயணிகளுக்கு உணவு பரிமாறுவதுதான் அந்த உணவகத்தின் சிறப்பு.

ஒரே நேரத்தில் 16 பேர் வரை அங்கு உணவருந்த முடியும். விளையாட்டு வினையாவது போல, இந்த உணவகத்தின் சாகச அனுபவம் ஆபத்தில் முடிந்துள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் இருந்து 5 சுற்றுலா பயணிகள் இன்று மதியம் 1 மணியளவில் அந்த உணவகத்திற்கு சென்றுள்ளனர். உணவு சாப்பிட சென்றவர்கள் கீழே இறங்க முடியாமல், 120 அடி அந்தரத்தில் சிக்கி தவித்துள்ளனர். கிரேனின் ஹைட்ராலிக் தொழில்நுட்பம் திடீரென்று பழுதானதால், கீழே இறக்க முடியவில்லை என்று ஆபரேட்டர் கூறியுள்ளார்.

2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம்

இதனால் சுற்றுலா பயணிகள் 5 பேர் மற்றும் அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக உணவகத்தில் சிக்கி தவித்துள்ளனர். சுற்றுலா பயணிகளில் இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். தகவலறிந்த மூணார் தீயணைப்புத் துறையினர் சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை கயிறு மூலமாகவே பத்திரமாக கீழே இறக்கிவிட முடியும். எனவே பயப்பட தேவையில்லை என்று அந்த தனியார் உணவகத்தின் உரிமையாளர் கூறினார்.

இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று மாலை 4.30 மணியளவில் சுற்றுலா பயணிகள் மற்றும் உணவகத்தின் பெண் ஊழியர் உள்ளிட்ட அனைவரையும் பத்திரமாக மீட்டனர். முதலில் குழந்தைகள் மற்றும் அவரின் தாயாரை மீட்டு பிறகு மற்றவர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உணவகத்தின் அலட்சியம்

சுற்றுலா பயணிகள் பயப்பட தேவையில்லை. அவசர சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டுமென்று அவர்களை தொடர்ந்து வழிநடத்தி வந்தோம் என்று சுற்றுலா பயணிகளுடன் இருந்த பெண் ஊழியர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட தனியார் உணவகம் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புக் குழுவிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், அருகில் உள்ள மக்கள் அளித்த தகவல் அடிப்படையில் ஊடகங்களில் செய்தி வெளியாகி அதைப் பார்த்து அரசு கவனத்திற்கு சென்றது தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+