டெல்லியில் பயங்கரம்.. 20 குண்டுகளால் துளைத்து கொல்லப்பட்ட தொழிலதிபர்.. வைரலான சிசிடிவி வீடியோ
டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றின் சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றின் சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. டெல்லியை அதிரவைத்த அந்த கொலையின் வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது.
மக்கள் நடமாடும் சாலையில் இப்படி ஒரு கொலையா என்று மக்கள் அந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டது டெல்லியை சேர்ந்த முக்கியமான தொழில் அதிபர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் உடலில் துப்பாக்கியை வைத்து மர்ம நபர் சுடும் காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கிறது.

கொலை
டெல்லியின் பிரம்மபுரி என்ற பகுதியில் சில நாட்களுக்கு முன்பு வஷித் என்ற தொழில் அதிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் தொழில் பகை காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த கொலை நடந்து பல நாட்கள் ஆகியும் வழக்கில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது.

உடல் பிரேத பரிசோதனை
கொலை செய்யப்பட்ட வஷித் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது அவர் உடலில் இருந்து மொத்தமாக 22 குண்டுகள் அகற்றப்பட்டது. உடலில் பல்வேறு பகுதிகளில் சில நிமிட இடைவெளியில் குண்டுகள் பாய்ந்து இருக்கிறது. கண்டிப்பாக இவர் துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் போலீஸ் விசாரணையை தீவிரபடுத்தியது.

சந்தேகம்
இந்த நிலையில் இந்த கொலையில் மூன்று பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. போலீஸ் வஷித்திற்கு போட்டியாக இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர்களை விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் இந்த கொலையை ஆள் வைத்து செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர். இந்த விசாரணை முடிவில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுக்கு எதிராக சாட்சியம் இல்லாமல் போலீசார் குழம்பி வந்தனர்.
சிசிடிவி வீடியோ
தற்போது இந்த கொலை வழக்கில் முக்கியம் திருப்பம் ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த கொலையின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. அதில் வஷித்தை சிலர் துரத்தி துரத்து துப்பாக்கியால் சுடுகின்றனர். அவர் வேகமாக ஒரு வீட்டுக்குள் ஓடுகிறார். அவரை வெளியே இழுத்து சாலையில் போட்டு மீண்டும் துப்பாக்கியால் சுடுகின்றனர். அவர்கள் ஹெல்மெட்டுடன் இந்த கொலையை செய்துள்ளனர். த்ற்போது இதை முக்கிய சாட்சியமாக பயன்படுத்த போலீஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications