இந்து நண்பனின் இறுதிச் சடங்கை தானே செய்த இஸ்லாமியர்: குவியும் பாராட்டுக்கள்
போபால்: மத்திய பிரதேசத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியான தனது இந்து மத நண்பனின் இறுதிச் சடங்கை தனி ஆளாக நின்று செய்துள்ளார் ஒரு இஸ்லாமியர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வசித்து வருபவர் ரசாக் கான் திகாரி. அவரது நண்பர் சந்தோஷ் சிங். மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் பைதுலில் மனைவி சாயா மற்றும் 8 வயது மகளுடன் வசித்து வந்தார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சந்தோஷ் கடந்த 20ம் தேதி காலமானார். அவரது இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்ய பணம் இல்லாமல் சாயா திண்டாடினார். இந்நிலையில் நண்பன் இறந்த செய்தி அறிந்து ரசாக் பைதுல் வந்தார்.
சாயா படும் அவதியை பார்த்த அவர் நட்புக்கு இடையே மதம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி சந்தோஷின் இறுதிச் சடங்குகளை தானே செய்வதாக தெரிவித்தார். அவர் இந்து மத முறைப்படி சந்தோஷ் சிங்கின் இறுதிச் சடங்குகளை செய்தார்.
இடுகாட்டில் துண்டு கட்டி தோளில் குடத்தை வைத்து சந்தோஷின் உடலை சுற்றி வந்து அவரின் மகளின் துணையோடு சிதைக்கு தீ மூட்டினார். ஒரு இஸ்லாமியராக இருந்தும் அவர் இந்து முறைப்படி சடங்குகள் செய்ததை பார்த்து பலரும் ரசாக்கை பாராட்டியுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications