தமிழகத்தில் 10 ஆண்டுகளில் இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்தது
டெல்லி: இந்தியாவில் 2011 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில் முஸ்லீம்களின் மக்கள் தொகை 24.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த வளர்ச்சியானது 1991 முதல் 2001 வரையிலான பத்தாண்டுடன் ஒப்பிடுகையில் குறைவுதான். அப்போது அது 29.3 சதவீதமாக இருந்தது.
அதேசமயம், இதே காலகட்டத்தில் இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சியானது தேசிய அளவில் 16.8 சதவீதமாக இருந்தது.
இந்தியாவில் உள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2001 முதல் 11 வரையிலான பத்தாண்டு காலகட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்துக்களை விட முஸ்லீம்களின் வளர்ச்சியே அதிகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துக்களின் வளர்ச்சி விகிதம்
2001 முதல் 2011 வரையிலான பத்தாண்டு காலத்தில் இந்தியாவில் உ.பி. (24.6), ஜார்க்கண்ட் (21.1), ராஜஸ்தான் (20.9), மத்தியப் பிரதேசம் (20), புதுச்சேரி (28.9), டெல்லி (20.7) ஆகிய மாநிலங்களில் இந்துக்களின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

தேசிய சராசரியை விடக் குறைவு
அதேசமயம், சில மாநிலங்களில் தேசிய சராசரியை விட குறைந்த வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இந்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களும் அடக்கம்.

தமிழகத்தில் 14.9 சதவீதம்
கேரளாவில் வளர்ச்சி விகிதமானது 2.2 சதவீதமாக இருந்தது. தமிழகத்தில் 14.9, அருணாச்சல் பிரதேசத்தில் 5.8, மேற்கு வங்கத்தில் 10.8, அஸ்ஸாம் 10.9, ஆந்திராவில் 10.3, ஹிமாச்சல் பிரதேசத்தில் 12.6, ஒடிஷாவில் 13.2, சட்டிஸ்கர் 13.2, மகாராஷ்டிரா 15.2, கர்நாடகா 15.8, ஹரியானா 16 என இந்த வளர்ச்சி விகிதம் இருந்தது.

லட்சத்தீவு, மிஸோரமில் வளர்ச்சி இல்லை
லட்சத்தீவு, மிஸோரமில் இந்துக்களின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதாவது லட்சத்தீவில் - 19.5 என்றும், மிஸோரமில் - 4.5 என்றும் வளர்ச்சி விகிதம் இருந்துள்ளது.

முஸ்லீம் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு
மறுபக்கம் இந்தியாவின் பல மாநிலங்களில் தேசிய சராசரியை விட முஸ்லீம் மக்களின் விகிதாச்சர வளர்ச்சி அதிகமாக இருந்தது. மிஸோரம் 46.9, ஹரியானா 45.7, சண்டிகர் 44.7, பஞ்சாப் 40.2, நாகாலாந்து 39.9, உத்தரகாண்ட் 39, டெல்லி 33, ராஜஸ்தான் 29.8, அஸ்ஸாம் 29.6, பீகார் 28, குஜராத் 27.3 சதவீதமாக அது இருந்தது.

கேரளாவில் இந்துக்களை விட முஸ்லீம்கள் படு வேக வளர்ச்சி
கேரளாவைப் பொறுத்தவரை முஸ்லீம்களின் மக்கள் தொகை அதிகரிப்பானது அதீதமாக இருந்தது. அதாவது 12.8 சதவீதமாக இது இருந்தது. அதேசமயம், இந்துக்களின் வளர்ச்சி விகிதம் 2.2 சதவீதம் மட்டுமே. கிறிஸ்தவர்களின் பங்கு அதிலும் குறைந்து 1.4 சதவீதமாக மட்டுமே இருந்தது.

பீகார் - அருணாச்சலில் கிறிஸ்தவர்கள் வளர்ச்சி அதிகம்
பீகார், அருணாச்சல் பிரதேச மாநிலங்களில் 2001-11 கால கட்டத்தில் கிறிஸ்தவர்களின் வளர்ச்சி விகிதமானது 100 சதவீதமாக இருந்தது. அதேசமயம், நாகாலாந்து -2.8, ஆந்திரா -4.4 ஆகிய மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் பின்தங்கிப் போய் விட்டது.

தமிழகத்தில் சீக்கியர்கள் அதிகரிப்பு
சீக்கியர்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் அவர்களது வளர்ச்சி விகிதமானது 53 சதவீதமாக இருந்தது. கேரளாவில் 38.1, ஆந்திரா 29.8, குஜராத் 27.8, ஒடிஷா 25.7 ஆக இருந்தது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications