அயோத்தியில் ராமர் கோவில் கட்டுங்கள்...நான் நன்கொடை தருகிறேன் - சொல்வது சமாஜ்வாடி முஸ்லிம் தலைவர்!
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம் தலைவர் ஒருவர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான புக்கால் நவாப் எம்.எல்.சி.
இதுபற்றி நேற்று அவர் அளித்த பேட்டியில், "நான் ஒரு முஸ்லிம். ஆனால் ராமரை நான் மதிக்கிறேன். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்" என கூறினார்.

மேலும், "அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கிய உடனேயே ரூபாய் 10 லட்சமும், ஒரு தங்க கிரீடமும் நன்கொடையாக வழங்குவேன்" என அறிவித்தார். அதே நேரத்தில் இது தனது தனிப்பட்ட கருத்து என்றும், கட்சிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் கூறினார்.
ஆனால் இதை சமாஜ்வாடி கட்சி சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சிவபால்சிங் யாதவ் கருத்து தெரிவிக்கையில், "பிரச்சினைக்குரிய இடத்தை தவிர்த்து வேறு எங்கும் ராமர் கோவில் கட்டுவதை நாங்கள் ஆதரிக்கிறோம். பிரச்சினைக்குரிய இடத்தில் கோர்ட் உத்தரவு பெறாமல் ஒரு கல்லைக்கூட மாற்றக்கூடாது" என குறிப்பிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications