மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: மோடிக்கு கடிதம் போட்ட சுவாமி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுரை விமான நிலையத்துக்கு தமிழக சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சுப்ரமணிய சுவாமி தனது கடிதம்:

முத்துராமலிங்கத் தேவரை கெளரவிக்கும் விதமாக, மதுரை விமான நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

Muthuramalinga Thevar name for Madurai Airport: Swamy writes to PM

இதே கோரிக்கையை, முந்தைய வாஜ்பாய் ஆட்சியின்போதும், முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் மதுரை விமான நிலையத்துக்கு சுதந்திர போராட்ட வீரர் 'முத்துராமலிங்க தேவர் சர்வதேச விமான நிலையம்' என்று பெயர் சூட்ட முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், இந்த கோரிக்கைக்கு அப்போதைய தமிழக அரசு இசைவு அளிக்கவில்லை.

எனவே, இதுதொடர்பான ஆவணங்களை பிரதமர் உடனடியாக ஆய்வு செய்து, மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் சர்வதேச விமான நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+