For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பும் முசாபர்நகர்: ஊரடங்கு உத்தரவு 7 மணி நேரத்திற்கு தளர்வு

By Siva
Google Oneindia Tamil News

முசாபர்நகர்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 7 மணிநேரம் மட்டும் தளர்த்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி ஒரு பெண்ணை கிண்டல் செய்தது தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலியாகினர்.

இந்நிலையில் கவல் வன்முறை குறித்த வழக்குகளை வாபஸ் பெறக்கூறி நாகலாபாத்ஹோத்தில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மகாபஞ்சாயத்து கூட்டம் கடந்த சனிக்கிழமை நடந்தது. பஞ்சாயத்து முடிந்து அவர்கள் வீடுகளுக்கு திரும்புகையில் மற்றொரு சமூகத்தினர் அவர்களை தாக்கினர். இதனால் முசாபர்நகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த கலவரம் பரவியது. இதில் 38 பேர் பலியாகினர், 67 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து முசாபர்நகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார், ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது. இந்நிலையில் முசாபர்நகர் மாவட்டத்தில் பகல் நேரத்தில் 7 மணிநேரத்திற்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

குத்பா

குத்பா

முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள குத்பா கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர்.

எரிந்த வீடு

எரிந்த வீடு

குத்பா கிராமத்தில் கலவரத்தின்போது எரிக்கப்பட்ட வீட்டுப் பக்கம் நடந்து செல்லும் ராணுவ வீரர்.

கவல்

கவல்

கலவரம் துவங்கிய கவல் கிராமத்தில் சேர் போட்டு அமர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸ்காரர்.

சச்சின்

சச்சின்

கவல் கிராமத்தில் நடந்த கலவரத்தில் பலியான தங்கள் மகன் சச்சினின் புகைப்படத்தை காட்டும் வயதான பெற்றோர்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஊரடங்கு உத்தரவு தளர்க்கப்பட்ட நேரத்தில் மக்கள் நடமாடும் பகுதிகளை கண்காணிக்கும் பாதுகாப்பு படையினர்.

கடை திறப்பு

கடை திறப்பு

ஊரடங்கு உத்தரவு தளர்க்கப்பட்ட நேரத்தில் கடையை திறந்து வைத்திருக்கும் வியாபாரிகள்.

காயம்

காயம்

கலவரத்தில் காயமடைந்த சிறுமிகள் அஸ்ரா(11) மற்றும் அக்ஷா(5) முசாபர்நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூதாட்டி

மூதாட்டி

கலவரத்தில் காயமடைந்த 70 வயது ஷகுரான் முசாபர்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகாம்

முகாம்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் முகாம் ஒன்றில் சாப்பிடுகின்றனர்.

கிராமத்தினர்

கிராமத்தினர்

ஷாபூர் அருகே உள்ள கக்டாவில் கலவரத்தின்போது காயமடைந்த கிராமத்தினர்.

English summary
With normalcy returning to riot-hit areas of Muzaffarnagar district, curfew was relaxed for seven hours on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X