முசாஃபர்நகர் கலவரம்- உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி: முசாஃபர் நகர் கலவரத்தின் போது பொது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உத்தரப்பிரதேச மாநில அரசு தவறிவிட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர் நகரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை மாநில அரசு தடுக்கவில்லை என்றும் நேர்மையான விசாரணை நடைபெறவில்லை எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், முசாஃபர் நகர் கலவரத்தின் போது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டது. கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் அரசியல் பாகுபாடின்றி கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தது.
அத்துடன் இது தொடர்பாக எந்த ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையோ அல்லது சிபிஐ விசாரணையோ தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கலவரத்தின் போது பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இதுபோன்ற கலவரங்களைக் கட்டுப்படுத்த நீண்டகால அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications