முசாபர்நகர் வன்முறை.. கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் சரண்!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: முசாபர்நகர் வன்முறை தொடர்பாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சங்கீத் சோம் இன்று போலீசில் சரணடைந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறினர்.
இந்த மோதலுக்கு காரணமாக இருந்ததாக பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 16 அரசியல்தலைவர்களுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் பாஜகவின் எம்.எல்.ஏ. சுரேஷ் ராணா நேற்று கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு பாஜக எம்.எல்.ஏவான சங்கீத் சோம் இன்று முசாபர்நகர் போலீசில் சரணடைந்தார். இவர் கலவரத்தைத் தூண்டும் வகையில் போலி வீடியோ காட்சிகளை இணையதளங்களில் பரவவிட்டார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications