அவள் பெயர் ஜோதி சிங்... அவளைக் கொன்றவனை தீ வைத்து எரியுங்கள்- "நிர்ப்பயா"வின் தாய் கண்ணீர்!
டெல்லி: டெல்லியில் கொடூரமாக பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்ப்பயா என அழைக்கப்படும் ஜோதி சிங்கின் தாயார் சிறுவனான குற்றவாளியை தீ வைத்து எரிக்க வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் தாயார் மூன்று வருடங்களுக்கு பின்னர் தன்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்று அறிவித்து உள்ளார்.
இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சிறுவனை விடுவிக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.

கொடூர பலாத்காரம்:
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் தேதி இரவு, மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதன் 3 ஆவது ஆண்டு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

என் மகள் ஜோதி:
அஞ்சலி செலுத்திய பின்னர் மாணவியின் தாயார் ஆஷா தேவி பேசுகையில், "தன்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்றும், என்னுடைய மகளின் பெயரை கூறுவது எனக்கு வெட்கமானது கிடையாது" என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?:
டெல்லியில் நடந்த கூட்டத்தில் பேசிய ஆஷா தேவி, "என்னுடைய மகளின் பெயரை கூறுவதில் நான் வெட்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தங்களுடைய பெயரை மறைக்க கூடாது. குற்றவாளிகளே வெட்கப்பட வேண்டும், அவர்களுடைய பெயரை மறைக்க வேண்டும்.

இனி ஜோதி என்றே அழையுங்கள்:
என்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்று எல்லோரிடமும் தெரிவிக்க விரும்புகின்றேன். இன்றில் இருந்து என்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்று எல்லோரிடமும் கூறுவேன்" என்று கூறிஉள்ளார்.

தீ வைத்துக் கொல்லுங்கள்:
இவ்வழக்கில் விடுதலை செய்யப்பட உள்ள சிறுவன் குறுத்து ஆஷா தேவி பேசுகையில், "எனது மகள் இறந்து மூன்றாவது ஆண்டு நாள் அனுசரிக்கப்படும் நிலையில், அவனை தீ வைத்து எரிக்க வேண்டும்" என்று கூறிஉள்ளார்.












Click it and Unblock the Notifications