விஜய்யின் பெயர் போட்டதால் என் ஃபோஸ்ட் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது: கலெக்டர் வேதனை
பாலக்காடு: நான் அட்டப்பாடி கிராமம் பற்றி ஃபேஸ்புக்கில் போட்டதில் விஜய்யின் பெயர் இருந்ததால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று பாலக்காடு துணை கலெக்டர் உமேஷ் கேசவன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட துணை கலெக்டர் உமேஷ் கேசவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அட்டப்பாடி என்ற பின்தங்கிய கிராமத்தில் மக்கள் தெருவிளக்கு, கழிப்பறை என அடிப்படை வசதி இல்லாமல் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு நடிகர் விஜய்யின் படங்கள் பற்றி மட்டும் தெரிந்துள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்த ஃபோஸ்ட் ஃபேஸ்புக்கில் தீயாக பரவிய நிலையில் இது குறித்து உமேஷ் கூறியிருப்பதாவது,

சுசித்வா திட்டம்
சுத்தமான இந்தியா போன்று கேரள மாநில அரசு நடத்தும் திட்டம் சுசித்வா திட்டம். இந்த திட்டத்தின்படி கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தான் நான் அட்டப்பாடி கிராமத்திற்கு சென்றேன்.

விஜய்
அட்டப்பாடி கிராமத்தின் மோசமான நிலையை பார்த்து அது குறித்து ஃபேஸ்புக்கில் தெரிவித்தேன். அதில் விஜய்யின் பெயர் இருந்ததால் வைரலாகிவிட்டது. எனது போஸ்ட்டை பலர் தவறாக புரிந்து கொண்டு விஜய்யின் மாஸ் இமேஜை பற்றி பேசுகிறார்களே தவிர பிரச்சனையை பற்றி கண்டுகொள்ளவில்லை.

சந்திப்பு
விஜய்யை நான் சந்தித்து பேசினேன். சுசித்வா திட்டத்தின் பிரதிநிதியாகுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தேன். ஒரு பிரபலமானவரை பிரதிநிதியாக்கினால் இந்த திட்டம் வெற்றி அடையும் என்று நம்புகிறேன்.

பிரபலம்
விஜய் கேரளாவில் மிகவும் பிரபலம். பல மலையாள சூப்பர் ஸ்டார்களை விட விஜய் தான் இங்கு பிரபலமாக உள்ளார். அதனால் அவரை சந்தித்து சுசித்வா திட்டத்திற்கு உதவுமாறு கேட்டேன். ஒரு நல்ல காரியத்திற்காகவே அவரை சந்தித்தேன். மற்றபடி எதுவும் இல்லை.
-
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி












Click it and Unblock the Notifications